உணவு வேதியியல்

 நாம் உண்ணும் உணவு வேதிப்பொருட்களை உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று வகையான உணவுகள் அவசியமாகும். 

1. உடல் வளர்ச்சி உணவுகள் :

      இவை உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன. எ. கா : புரதங்கள்.

புரதங்கள் :

    உடலுக்குத்  தேவையான முக்கியமான ஊட்டச்சத்தாகவும், அதற்கான கட்டமைப்புப் பொருளாகவும் புரதங்கள் உள்ளன. 

    இவை செல்கள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கும், அவற்றைப் பாதுகாப்பதற்கும் அவசியமாகும். 

   புரதங்களானவை பல அமினோ அமிலங்களைக் கொண்டு உருவானவை. 

   அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் உடலில் உருவாக்கப்படுவதில்லை. எனவே, இவற்றை உணவில் இருந்துதான் பெற்றுக்கொள்ள வேண்டும். 

  நம் உடலில் ஒன்பது அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் உள்ளன. அவை ஃபினைல்  அலனைன்,  வேலைன், கிரியோனைன், டிரிப்டோஃபேன், மெத்தியோனின், லு சைன், ஐசோ லு சைன், லைசின் மற்றும் ஹிஸ்டிடைன். 

2. ஆற்றல் அளிக்கும் உணவுகள் :

      இவை உடல் உறுப்புகளின் செயல்பாட்டிற்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றன.                                                            எ. கா : கார்போஹைட்ரேட்டுகள்.

கார்போஹைட்ரேட்டுகள் :

  கார்போஹைட்ரேட்டுகள் என்பவை கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றைக் கொண்ட கரிம கூட்டுப்பொருளாகும். 

    குளுக்கோஸ், சுக்ரோஸ், லாக்டோஸ், ஸ்டார்ச் மற்றும் செல்லுலோஸ் ஆகியவை கார்போஹைட்ரேட்டுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். கார்போஹைட்ரேட்டுகள் ஒற்றைச் சர்க்கரை ( குளுக்கோஸ்) , இரட்டைச் சர்க்கரை ( சுக்ரோஸ்) மற்றும் கூட்டுச் சர்க்கரை ( செல்லுலோஸ்) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

3. பாதுகாப்பளிக்கும் உணவுகள் :

       இவை உணவு பற்றாக்குறையால் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கின்றன.  எ. கா : வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள். 

வைட்டமின்கள் :

வைட்டமின்கள் சிறிய அளவில் தேவைப்படும் மிக முக்கியமான ஊட்டச்சத்தாகும். இவை குறிப்பிட்ட உடற்செயலியல் மற்றும் உயிர் வேதியியல் செயல்பாடுகளுக்கு தேவைப்படுகின்றன. 

தாது உப்புகள்

   உயிரினங்கள் தாங்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான பல்வேறு உயிரியல் செயல்பாடுகளைப் புரிவதற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தாது உப்புகள் எனப்படும் கரிமப் பொருள்கள் உள்ளன. 

   பற்கள், எலும்புகள், இரத்தம், தசை மற்றும் நரம்பு செல்களில் இவை அடங்கியுள்ளன. 

   கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை மனித உடலுக்கு அதிகமாக தேவைப்படும் பெரும ஊட்ட தனிமங்களாகும்

   கந்தகம், இரும்பு, குளோரின், கோபால்ட், தாமிரம், துத்தநாகம், மாங்கனீசு, மாலிப்டினம், அயோடின் மற்றும் செலினியம் போன்றவை மிகவும் குறைவாக தேவைப்படும் நுண்ணூட்டத் தனிமங்களாகும். 

  

    நமது உடலானது சீராக செயல்பட, இம்மூன்று உணவுகளும் சரிவிகிதத்தில் தேவைப்படுகிறது. இவற்றை சரியான விகிதத்தில் கொண்டுள்ள உணவே                      " சரிவிகித உணவு "  எனப்படும். 

   உணவு வேதியியல் என்பது உணவின் வேதியியல் ஆகும். இது பகுப்பாய்வு, பதப்படுத்துதல், உணவை கலன்களில் அடைத்தல், மேலும் பாதுகாப்பு மற்றும் தளத்திற்கான உயிரி ஆற்றலைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். 


உணவு வேதியியலின் இலக்கு

அ). உணவு வேதியியலின் முக்கிய இலக்கானது தரமான உணவை தேவையின் அடிப்படையில் நீடித்த, நிலையான வழியில் மக்களுக்கு வழங்குவதாகும். 

ஆ) . உணவு ஆய்வாளர்கள், உணவு பற்றிய அடிப்படை ஆராய்ச்சியில் புரதங்கள், கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் பற்றியும், உணவுச் சேர்க்கைப் பொருள்கள், நறுமண சுவையூட்டிகள் போன்ற நுண் சேர்மங்கள் ஆகியவற்றைப் பற்றியும், அவை உணவு அமைப்பில் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றியும் ஆராய்கின்றனர். 

இ) . பயன்பாட்டிற்கான ஆராய்ச்சியில் கொழுப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றிற்கு பதிலாக புதிய பொருள்களைப பயன்படுத்தும் வழிமுறைகளை புதிதாக உருவாக்குகின்றனர். 



கருத்துகள்

popular content