வீடுகளில் கலப்பட பொருள்களை கண்டறிதல்
1 பால் :
சாய்வான வழவழப்பான மேல் பகுதியில் ஒரு துளி பாலினை வைக்கவும். கலப்படமற்ற பாலாக இருந்தால் மெதுவாக வழியும் மற்றும் வடிந்த இடத்தில் பால்தடம் காணப்படும். அதே சமயம் நீர் கலக்கப்பட்ட பாலாக இருந்தால் வேகமாக வடிந்து பாலின் தடம் காணப்படுவதில்லை.
2. தேன்:
தேனில் பருத்தினால் செய்யப்பட்ட ஒரு திரியின் முக்கி எடுத்து தீக்குச்சி யால் கொளுத்த வேண்டும். கலப்படமற்ற தேன் எரியும். ஆனால் சர்க்கரைக் கரைசல் சேர்க்கப்பட்ட தேன் படபடவென்று வெடிக்கும்.
3. சர்க்கரை :
சர்க்கரையை நீரில் கரைக்கவும். சாக்பீஸ் பொடி சர்க்கரையுடன் சேர்க்கப்பட்ட இருந்தால், அப்படி சர்க்கரைக் கரைசலின் அடிப்பகுதியில் வீழ்படிவாக்கும்.
4. காப்பித் தூள் :
ஒரு கண்ணாடி டம்ளரில் நீரினை எடுத்து அதில் ஒரு சில கரண்டிகள் காப்பித் தூளைத் தூவ வேண்டும். காப்பித் தூள் நீரில் மிதக்கும். ஆனால் புளிக்கொட்டை பொடியுடன் கலப்படம் செய்யப்பட்டிருந்தால் புளிக்கொட்டை கொடியானது நீரின் அடியில் படியும்.
5. உணவு தானியங்கள் :
இவற்றில் கற்கள், மணல் மற்றும் பளிங்கு கற்கள் போன்றவை காணப்படும். இவற்றை பிரித்தல், கழுவுதல் முறைப்படி தூய்மை படுத்தலாம்.
கோடக்ஸ் அலிமென்டாரியஸ் : ( இலத்தீன் மொழியில் " உணவு விதி " ) என்பது உணவுகள், உணவு உற்பத்தி பொருள்கள் செய்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தர நிர்ணயங்களை, விதிமுறைகள், வழிமுறைகள் மற்றும் இதர பரிந்துரைகள் அடங்கிய ஒரு தொகுப்பாகும். சர்வதேச அளவில் ஏற்படும் உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பில் எழும் விவாதங்களை தீர்த்து வைப்பதற்கு உலக வர்த்தக நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்புதான் " கோடக்ஸ் அலிமென்டாரியஸ் ".
அக்டோபர் 16 -ஆம் தேதி "உலக உணவு தினம்" கடைப்பிடிக்கப்படுகிறது. அன்று உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவு கெட்டுப் போவதைத் தடுத்தல் வலியுறுத்தப்படுகிறது.
வாழைப்பழத்தை அறை வெப்பநிலையில் கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் பாதுகாக்கலாம். ஆனால், அதனை குளிர் சாதனப் பெட்டியில் வைத்தால், பழுக்கச் செய்வதற்கு தேவையான நொதியானது செயலிழந்து விடுகிறது. மேலும், செல்களை அழித்து பழுப்பு நிறத்தை உருவாக்க காரணமான நொதியானது அதிகம் செயல்பட்டு, அதனால் பழத்தின் தோல் மஞ்சள் நிறத்தில் இருந்து இருண்ட பழுப்பு நிறத்திற்கு மாறுகிறது.
:
கருத்துகள்
கருத்துரையிடுக