தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் ( தனிமங்கள்)

தூய பொருள் ஒரே ஒரு பொருளைப் பெற்றதே தூய பொருளாகும்.
எ.கா. 1. மின்கம்பியில் உள்ள காப்பர்
            2. வாலை வடிநீர்.
            3. தூய சர்க்கரை.
            4. சமையல் சோடா.
தூய பொருளை அறிய அவற்றின்
            அடர்த்தி,
            உருகுநிலை,
            ஒளிவிலகல் எண்,
            மின்கடத்துத்திறன்,
            பாகியல் தன்மை போன்ற பண்புகளை கொண்டு கண்டறியலாம்.

தனிமங்கள் பற்றிய அறிஞர்கள் கூற்று:

1. பாயில் கூற்று:

எந்தவொரு தூய பொருளை இயற்பியல் அல்லது வேதியியல் முறையினால் மேலும் பிரிக்க முடியாதோ, அப்பொருளே தனிமமாகும்.

2. லாவாய்சியர் கூற்று:

எந்தவொரு தொடக்க நிலையிலுள்ள பருப்பொருளை மேலும் சிறிய பொருளாக உடைக்க முடியாதோ அது தனிமமாகும்.

3. தற்கால அணுக்கொள்கை:

ஒரே வகை அணுக்களால் ஆனவையே தனிமமாகும்.
எ.கா. ஹைட்ரஜன், நைட்ரஜன், கார்பன், தங்கம், வெள்ளி போன்றவை.

தனிமத்தில் மிகச்சிறிய துகள்களே அணுக்களாகும்.

இதுவரையில் கண்டறியப்பட்டுள்ள தனிமங்கள் 118.

இவற்றில் 92 தனிமங்கள் இயற்கையிலும் ( 82 - சாதாரண தனிமங்கள், 10 - கதிரியக்க தனிமங்கள்), 26 தனிமங்கள் ஆய்வகத்திலும் தயாரிக்கப்படுகின்றன.

தற்போதைய நிலையில் 118 தனிமங்களுக்கும் IUPAC குறியீடு தரப்பட்டுள்ளது.

புவியில் நான்கில் மூன்று பங்கு ஆக்சிஜனும், சிலிக்கனும் உள்ளன.           ( ஆக்சிஜன் - 46.6%, சிலிக்கன் -27.7%.)

மனித உடலின் நிறையில் ஏறத்தாழ 99% ஆறு தனிமங்களால் ஆனது.
         ஆக்சிஜன்       = 65%
         கார்பன்            = 18%
         ஹைட்ரஜன்   = 10%
         நைட்ரஜன்      = 3%
         கால்சியம்       = 2%
         பாஸ்பரஸ்      = 1% இதர தனிமங்கள் மீதி 1%.

இயற்கையில் உள்ள தனிமங்கள் சதவீதத்தில்,
          ஆக்சிஜன்         = 46.6%
          சிலிக்கான்       = 27.7%
          அலுமினியம்   = 8.1%
          இரும்பு               = 5%
          கால்சியம்         = 3.6%
          சோடியம்           = 2.8%
          பொட்டாசியம்  = 2.6%
இதர தனிமங்கள்     = 2.6%

அண்டம் மற்றும் விண்மீனில் உள்ள தனிமம் - ஹைட்ரஜன், ஹீலியம்.

தனிமங்களின் வகைப்பாடு:

1. இயற்பியல் நிலையின்                                   அடிப்படையில்:

அ) நீர்மம்:

அறை வெப்பநிலையில் திரவமாக உள்ள தனிமங்கள் - மெர்குரி, புரோமின்.
30゜c -ல் திரவமாக உள்ள தனிமங்கள் - சீசியம், காலியம்.

ஆ) வாயு:

ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்சிஜன், குளோரின், ஃபுளூரின், ஹீலியம், நியான், நியான், ஆர்கான், கிரிப்டான், ரேடான் மற்றும் செனான்.

இ) திண்மம்: 

மீதமுள்ள தனிமங்கள் அனைத்தும் திண்மநிலையில் உள்ளன.
எ.கா. கார்பன், காப்பர், தங்கம், வெள்ளி போன்றவை..

பண்புகளின் அடிப்படையில்:

அ) உலோகம்: ( 72 தனிமங்கள்)

       * கடினமானவை ( சோடியம், பொட்டாசியம் தவிர).
       * பளபளப்பானவை.
       * தகடாக அடிக்கலாம், கம்பியாக நீட்டலாம்.
       * மின்சாரத்தை நன்கு கடத்தும்.
       * ஒலி எழுப்பக்கூடியவை.
       * அனைத்தும் திண்மங்கள் ( பாதரசம் தவிர)
       * உருகுநிலை, கொதிநிலை அதிகம்  ( Na, K தவிர).

ஆ) அலோகம்: ( 16 அல்லது 17 தனிமங்கள்)

         ~ கடினமற்றவை ( வைரம் தவிர )
         ~ பளபளப்பற்றவை (அயோடின், வைரம், கிராஃபைட் தவிர )
         ~ தகடாக அடிக்க இயலாது, கம்பியாக நீட்ட முடியாது.
         ~ மின்சாரத்தை கடத்த இயலாது        ( கிராஃபைட் தவிர)
          ~ ஒலி எழுப்பாது ( அயோடின் தவிர)
          ~ திண்ம, திரவ, வாயு நிலையில் காணப்படும்.
          ~ உருகுநிலை, கொதிநிலை குறைவு ( கிராஃபைட் தவிர).

இ) உலோகப்போலிகள்:

இவை உலோகப் பண்புகளையும், அலோகப் பண்புகளையும் பெற்றிருக்கும்.
எ.கா. போரான், சிலிக்கான், ஜெர்மானியம்.

தனிமங்களின் பயன்கள்: 

1. விழாக்காலங்களின்போபோது பலூன்களில் நிரப்பப்படும் வாயு ஹீலியம் (He).

2. ஒளிரும் விளக்கு உருவாக்க பயன்படும் வாயு கிரிப்டான் (Kr).

3. அதிக ஒளிரக்கூடிய விளக்குகளில் உள்ள வாயு செனான் (Xe).

4. பட்டாசு வெடிக்கும்போது உருவாகும் வண்ண நிறத்திற்கு காரணம் ஸ்டிரான்சியம் (Sr).

5. பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகமுள்ள தனிமம் பொட்டாசியம் (K).

6. செல்போனில் உள்ள சிம்கார்டில் உள்ள தனிமம் சிலிக்கான் (Si).

7. மின்கலங்களில் அதிகம் பயன்படும் தனிமம் லித்தியம் (Li).

8.மன்விளக்குகளில் ஒளிரும் பகுதி தயாரிக்க பயன்படுவது டங்ஸ்டன் (W).

9. செல்போன் தயாரிக்க பயன்படும் தனிமம் டேன்டலம் (Ta).

10. வெப்பநிலைமானிகளில் உள்ள தனிமம் பாதரசம் (Hg).

11.நீரை தூய்மைபடுத்த பயன்படுவது குளோரின் (Cl).

12. விளையாட்டு உபகரணங்கள் தயாரிக்க பயன்படுவது போரான் (B).

13.எலும்பு வளர்ச்சிக்கு முக்கியமான தனிமம் பாஸ்பரஸ் (P).

14. பற்கள் உறுதியாக இருக்க அதிகம் பயன்படும் தனிமம் கால்சியம் (Ca).

15. புரத சத்தில் அதிகம் உள்ளது நைட்ரஜன் (N).

16. LED -ல் பயன்படும் தனிமம் காலியம்(Ga).

17. LCD -ல் பயன்படும் தனிமம் இண்டியம்(In).

18. X - ray (Diagnosis) படம்பிடித்தலில் பயன்படுவது பேரியம் (Ba).

19. MRI- (Diagnosis) படம்பிடித்தலில் பயன்படும் தனிமம் கடோலினியம் (Gd).

20. அணுக்கடிகாரத்தில் பயன்படம் தனிமம் சீசியம் (Cs).

21. பேனா முனை தயாரிப்பில் பயன்படும் தனிமம் ஆஸ்மியம் (Os).

22. கிருமிநாசினியாக பயன்படும் தனிமம் அயோடின் (I).

23. படச்சுருளில் பயன்படம் தனிமம் புரோமின்(Br).

24. பெயிண்ட் தயாரிக்க பயன்படும் தனிமம் காட்மியம் (Cd).

25. காந்தம் தயாரிக்க பயன்படும் தனிமம் கோபால்ட் (Co).


கருத்துகள்

  1. தனிமம் மற்றும் சேர்மம் உள்ள பொருள் என்ன?

    பதிலளிநீக்கு
  2. தனிமங்கள் சேர்மங்கள் வரையறு

    பதிலளிநீக்கு
  3. தனிமம் சேர்மம் என்றால் என்ன

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

popular content