மாற்று எரிபொருள்கள்

 மாற்று எரிபொருள்கள் :

    பூமியில் உள்ள இயற்கை வளங்கள் யாவும்  மனிதனால்  அதிகமாகப்  பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, அவை விரைவில் தீர்ந்துவிடும் நிலையில் உள்ளன நாம் பயன்படுத்தி வரும் மரபு எரிபொருளான பெட்ரோலியம் புதுப்பிக்க இயலாதகவும் விரைவில் தீர்ந்து  போய்விடக்கூடியதாகவும் இருக்கிறது. இன்னும் 148 ஆண்டுகளில் நிலக்கரியும், 40 ஆண்டுகளில் பெட்ரோலியமும், 61 ஆண்டுகளில் இயற்கை வாயுவும் தீர்ந்து விடும் நிலையில் உள்ளன. எனவே, மாற்று ஆற்றல் மூலங்களைக் கண்டறிய வேண்டிய தேவை இருக்கிறது. 

1. உயிரி - டீசல் :

  இது தாவர எண்ணெய் களான சோயாபீன் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், சோள எண்ணெய்,  சூரிய காந்தி எண்ணெய், பருத்தி  விதை எண்ணெய், அரிசித் தவிடு எண்ணெய் மற்றும் இரப்பர் மர விதை எண்ணெய் போன்ற எண்ணெய் களிலிருந்து  கிடைக்கிறது. 

 2. காற்றாற்றல் :

     காற்றாலைகள் மூலம் காற்றாற்றல் பெறப்படுகிறது. காற்று வீசும்பொழுது காற்றாலை களின் பிளேடு கள் சுழன்று அதனுடன் இணைக்கப்பட்டுள்ள டைனமோ ( மின்னியற்றி) மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.


தமிழகத்தில் கயத்தாறு, ஆரல்வாய்மொழி, குடிமங்கலம் மற்றும் பல்லடம் ஆகிய ஊர்களில் பெரும்பாலான காற்றாலைகள் அமைந்துள்ளன. 

3. சாண எரிவாயு :

    காற்றில்லாச் சூழலில் மாட்டுச் சாணத்தை நொதிக்க வைத்து சாண எரிவாயு பெறப்படுகிறது. இதில் பெரும்பான்மையான மீத்தேனும் சிறிதளவு ஈத்தேனும் உள்ளது. இவ்வாயு பெரும்பாலும் சமைக்கவும், எந்திரங்களை இயக்கவும் கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படுகிறது. 

4. சூரிய ஆற்றல் :

    சூரியனே பூமியில் உயிரினங்கள் வாழத் தகுந்த சூழ்நிலையை உண்டாக்கக்கூடிய முதன்மையான மற்றும் முக்கியமான ஆற்றல் மூலமாகும். 


  சூரிய ஆற்றல் மட்டுமே தீர்ந்துவிடாத இயற்கை ஆற்றல் மூலமாகும். இது விலையில்லா மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளமாக உள்ளது. இது சுற்றுச்சூழலைப் பாதிக்காத, தீர்ந்து போகாத ஆற்றல் வளமாகும். 

சூரிய ஆற்றலின் பயன்பாடுகள் :

 * சூரிய ஆற்றல் நீர் சூடேற்றியில் பயன்படுத்தப்படுகிறது. 

  * விவசாயம்  மற்றும் விலங்குகள் சார்ந்த பொருட்களை உலரவைக்கப் பயன்படுத்தப்படுகிறது.   

  * மின்னாற்றல் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. 

  * சூரிய பசுமை இல்லங்களில் பயன்படுத்தப்படுகிறது. 

  * நீர் இறாத்தல் மற்றும் காய்ச்சி வடித்தலில் சூரிய ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது.   

  * சமைத்தல் மற்றும் சூடேற்றும் உலைகளிலும் இது பயன்படுகிறது. 

5. ஹைட்ரஜன் எதிர்கால எரிபொருள் :

   எதிர்காலத்தில் ஹைட்ரஜன் வாயு ஒரு மிகச் சிறந்த மாற்று எரிபொருளாக இருக்கும். இந்த எரிபொருள் தூய்மையானது. ஏனெனில், இது எரியும் பொழுது நீர் மட்டுமே வெளிவரும். இது மட்டுமல்லாமல் அதிகமான ஆற்றலையும் தரவல்லது. மேலும், காற்றை மாசுப்படுத்தாத தன்மையையும் இது பெற்றுள்ளது.


கருத்துகள்

popular content