உணவு கலப் படத்தை கண்டறிதல்

1. வாழைப்பழம் :

      கலப்பட பொருள் :

             கால்சியம் கார்பைடு - பழுக்க வைக்கப் பயன்படுகிறது. 

கண்டறிதல் :

    முதிர்ச்சியடையும் வாழைக்காய் மஞ்சள் நிறத்திற்கு பதிலாக பச்சையாக காணப்படும். 

உடல்நலக் கேடுகள்

   புற்றுநோய், சீரண உறுப்புகள் பாதிக்கப்படும், கல்லீரல் பாதிப்பு. 

2 . ஆப்பிள் :

       கலப்பட பொருள் :

       மெழுகு பூச்சு செல்லாக் அல்லது கார்னோ மெழுகு. 

கண்டறிதல் :

    ஆப்பிள் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும். அதனை சுரண்டி னால் மெழுகு உரிவதைப் பார்க்கலாம். 

உடல்நலக் கேடுகள் :

    சீரண கோளாறுகள், அழற்சி, வாயு தொல்லை. 

3. மாம்பழம் :

   கலப்பட பொருள் :

   கால்சியம் கார்பைடு - பழுக்க வைக்கப் பயன்படுத்துவது. 

கண்டறிதல் :

   மாம் பழத்தின் நிறம் ஒரே சீராக காணப்படும். பழங்கள் வைத்திருக்கும் இடத்தில் பச்சையாக இருக்கும். 

உடல்நலக் கேடுகள் :

    தலைவலி, மயக்கம், வாந்தி, நரம்பு பிரச்சினை

4. பச்சை காய்கறி, பாகற்காய், பச்சை மிளகாய் :

    கலப்பட பொருள்

    மாலசைட் பச்சை

கண்டறிதல்

    காய்கறிகளை ஒரு ஒன்று காகிதத்தில் ஒற்றி எடுத்தால் நிறங்கள் தெரியும். 

உடல்நலக் கேடு :

     புற்றுநோய்

5. உப்பு :

கலப்பட பொருள் :

   சுண்ணாம்பு

கண்டறிதல்   

    சிறிதளவு  உப்பினை எடுத்து நீர் ஊற்றி கரைசலாக்கி கொள்ள வேண்டும். சுண்ணாம்பு சேர்ந்திருந்தால் கரைசல் வெண்மையாக மாறும். 

உடல்நலக் கேடு :

    வாயு தொல்லை

6. மிளகாய் தூள் :

கலப்பட பொருள் :

   செங்கல் பொடி

கண்டறிதல்

   சிறிதளவு பொடி எடுத்து நீரில் கரைத்தால் செங்கல் பொடி நீரின் அடியில் தங்கிவிடும். மிளகாய் தூள் மிதக்கும். 

உடல்நலக் கேடுகள் :

    பார்வை குறைபாடு, சுவாசக் கோளாறு, சீரண கோளாறு. 

7. தேயிலை :

 கலப்பட பொருள் :

   நிலக்கரி தார்

கண்டறிதல் :

   ஒற்று காகிதத்தில் தேயிலைத் தூள் தூவி விட்டால் நிறப் புள்ளிகள் தோன்றினால் கலப் படத்தை குறிக்கும். 

8. ஐஸ்கிரீம் :

கலப்பட பொருள்

  சலவைத் தூள்

கண்டறிதல் :

    சிறிய அளவிலான ஐஸ்கிரீம் எடுத்து சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்தால் நுரை தோன்றினால் சலவைத் தூள் கலப்படம் செய்யப்பட்டது என்பதை அறியலாம். 

உடல்நலக் கேடுகள் :

   தீவிர வயிற்று போக்கு, கல்லீரல் பிரச்சனைகள்.

கருத்துகள்

popular content