ஹைட்ரோ கார்பன்கள்

ஹைட்ரோ கார்பன்கள் :

     ஹைட்ரஜன் மற்றும் கார்பன் அணுக்களைக் கொண்ட கரிமச் சேர்மங்கள் ஆகும். 

  * இவை இயற்கையில் உருவாகின்றன.



  * படிம எரிபொருளான பெட்ரோலியம், இயற்கை வாயு மற்றும் நிலக்கரியிலும் இவை காணப்படுகின்றன. 

  * இவை எரியக்கூடியவை. 

  * பெரும்பாலான ஹைட்ரோ கார்பன்கள் நீரில் கரையாதவை. 

  * நீரை விட அடர்த்தி குறைந்தவை. 

  * இவை ஆக்சிஜனுடன் வினைபுரிந்து  கார்பன் டை ஆக்சைடு, நீர் தருகின்றன.

  * இவை வாயுக்களாகவும் ( எ. கா : மீத்தேன் மற்றும் புரோப்பேன்), திரவங்களாகவும் ( எ. கா : ஹெக்டேர் மற்றும் புரோப்பேன்), மெழுகு போன்ற திண்மங்களாகவும் ( எ. கா : பாரபின்கள்) காணப்படுகின்றன. 

  * இவை சங்கிலி தொடக்கம் ( காட்டினேன்) என்ற பண்பினால் அதிக எண்ணிக்கையிலான சிக்கலான கரிம சேர்மங்களை உண்டாக்குகின்றன. 

ஹைட்ரோ கார்பன்களின் வகைகள் :

    அ) அல்கேன்கள்

    ஆ) ஆல்கீன்கள்

    இ) அல்கேன்கள்

    ஈ) அரீன்கள்

மீத்தேன் :

 * இது மிகவும் எளிய ஹைட்ரோ கார்பன்கள் ஆகும். 

 * இது ஒரு நிறமற்ற, மணமற்ற மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய வாயுக்களாகும். 

 * இது சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளாகும். 

  * இது மின்சார உற்பத்தியில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. 

  * சதுப்பு நிலப் புதர்களில் காணப்படுவதால் " சதுப்பு நில வாயு " என்று அழைக்கப்படுகிறது. 

 * இது " கொள்ளி வாயு " என்றும் அழைக்கப்படுகிறது. 

புரோப்பேன் :

  * இது மணமற்ற மற்றும் மிகவும் எளிதில் தீப்பற்றக்கூடிய வாயுவாகும். 

  * காற்றை விடக் கனமானது. 

  * இது அதிக அழுத்தத்தினால் திரவமாக்கப்பட்ட பியூட்டேனுடன் சேர்ந்து திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் வாயுவாக ( LPG)  பயன்படுத்தப்படுகிறது. 

  * இது வெப்பப்படுத்துவதற்கும், சமைப்பதற்கும் மற்றும் வாகனங்களில் எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. 

  * புரோப்பேன் வாயு குளிர்பதனப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. 

பியூட்டேன் :

 * இது அறை வெப்பநிலை மற்றும் வளிமண்டல அழுத்தத்தில் வாயுவாக உள்ளது. 

 * இது நிறமற்ற மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய வாயு. 

 * இது அறை வெப்பநிலையில் மிக எளிதில் ஆவியாகிவிடக்கூடியது

 * இது செயற்கை வாசனைப் பொருள்கள் போன்ற ஏரோசால் தெளிப்பான்களில் உந்தியாகவும், எரிபொருளாகவும் பயன்படுகிறது. 

 * தூய பியூட்டேன் குளிர்பதனப் பொருளாகவும் பயன்படுகிறது. 

 * இது டார்ச் விளக்குகளில் எரிபொருளாகவும் பயன்படுகிறது. 

பென்டேன் :

  * இவை குறைந்த கொதிநிலை கொண்ட திரவங்களாகவும். 

  * இவை ஆய்வகங்களில் கரைப்பானாகவும் மற்றும் எரிபொருளாகவும் பயன்படுகிறது. 

  * இவை " பாலிஸ்டைரீன் "  என்ற வேதிப் பொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.

  



கருத்துகள்

popular content