எரிபொருள்கள்
எரிபொருள்:
எரியும் பொழுது வெப்ப மற்றும் ஆற்றலைத் தரும் எந்தப் பொருளும் எரிபொருள் எனப்படும்.
(எ. கா) மரம், கரி, பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை வாயு.
எரிபொருளின் வகைகள் :
அ. திட எரிபொருள்கள்
ஆ திரவ எரிபொருள்கள்
இ. வாயு எரிபொருள்கள்
அ. திட எரிபொருள்கள் :
மரம் மற்றும் நிலக்கரி போன்றவை திட நிலையில் உள்ளதால் அவை திட எரிபொருள்கள் எனப்படுகின்றன.
இந்த வகை எரிபொருள்களே முதன் முதலில் மனிதனால் பயன்படுத்தப்பட்டன.
இவற்றை எளிதில் சேமிக்கவும், எடுத்துச் செல்லவும் முடியும்.
இவற்றிற்கான உற்பத்திச் செலவு குறைவு.
ஆ. திரவ எரிபொருள்கள் :
பெரும்பாலான திரவ எரிபொருள்கள் இறந்த தாவர மற்றும் விலங்குகளின் படிமங்களிலிருந்து பெறப்படுகின்றன.
பெட்ரோலிய எண்ணெய், கரி தார் மற்றும் ஆல்கஹால் ஆகியவை சில திரவ எரிபொருளாகும்.
இந்த எரிபொருள்கள் எரியும் பொழுது அதிக ஆற்றலைத் தருகின்றன. மேலும், இவை சாம்பலை உருவாக்குவதில்லை.
இ. வாயு எரிபொருள்கள் :
நிலக்கரி வாயு, எண்ணெய் வாயு, உற்பத்தி வாயு மற்றும் ஹைட்ரஜன் வாயு ஆகியவை வாயு எரிபொருள்கள் ஆகும்.
இவற்றை குழாய்கள் மூலம் எளிதில் எடுத்துச் செல்ல முடியும். மேலும், இவை மாசுபாட்டை ஏற்படுத்துவதில்லை.
எரிபொருள்களின் பண்புகள் :
* எளிதில் கிடைக்க வேண்டும்.
* எளிதில் கொண்டு செல்லப்படக் கூடியதாக இருக்க வேண்டும்.
* குறைந்த விலையில் கிடைக்க வேண்டும்.
* உயர்ந்த கலோரி மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும்.
* அதிகமான வெப்பத்தை வெளியிட வேண்டும்.
* எரிந்த பிறகு விரும்பத்தகாத பொருள்களைத் தரக்கூடியது.
எரிபொருள் திறன் :
1. தன் ஆற்றல்
2. கலோரி மதிப்பு
1. தன் ஆற்றல் (Specific Energy) :
ஓரலகு நிறையுடைய எரிபொருள் எரியும் பொழுது வெளியிடும் வெப்ப ஆற்றலே தன் ஆற்றல் எனப்படும்
இதன் SI அலகு J/kg
2. கலோரி மதிப்பு :
இது சாதாரண சூழ்நிலைகளில் நிலையான அழுத்தத்தில் ஒரு எரிபொருள் முழுமையாக எரிந்து வெளிவிடும் வெப்ப ஆற்றலின் அளவாகும்.
இதன் SI அலகு KJ/ g
பல்வேறு எரிபொருள்களின் கலோரி மதிப்பு.
ஆக்டேன் எண் :
இது பெட்ரோலில் உள்ள ஆக்டேன் என்ற ஹைட்ரோ கார்பனின் அளவைக் குறிக்கும் ஒரு எண்ணாகும்.
உயர்ந்த ஆக்டேன் எண்ணைப் பெற்றுள்ள எரிபொருள் ஒரு நல்லியல்பு எரிபொருளாகும்.
சீட்டேன் எண் :
இது டீசல் எஞ்சினில் உள்ள எரிபொருளின் பற்றவைப்பு தாமதம் கால அளவை அளிப்பதாகும்.
சீட்டேன் எண் அதிகம் கொண்ட எரிபொருள் குறைவான பற்றவைப்பு நேரத்தைக் கொண்டிருக்கும்.
உயர்ந்த சீட்டேன் எண் கொண்ட எரிபொருள் ஒரு நல்லியல்பு எரிபொருளாகும்.
ஆக்டேன் எண், சீட்டேன் எண் வேறுபாடுகள் :
கருத்துகள்
கருத்துரையிடுக