வாயு எரிபொருள்கள்

 1 உற்பத்தி வாயு : ( CO & N2 )

    உற்பத்தி வாயு என்பது கார்பன் மோனாக்சைடு வாயுவும் நைட்ரஜன் வாயுவும் கலந்த கலவையாகும். 

தயாரிப்பு :

   செஞ்சூடான கல்கரியின் மீது 1100°C வெப்பநிலையில் நீராவி கலந்துள்ள காற்றினைச்  செலுத்துவதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. 

உற்பத்தி வாயு அமெரிக்காவில் " மர வாயு " என்றும், இங்கிலாந்தில்  "உறிஞ்சி வாயு " என்றும் அழைக்கப்படுகிறது

உற்பத்தி வாயுவின் இயைபு :


கார்பன் மோனாக்சைடு = 22 - 30 ℅

ஹைட்ரஜன்  = 8 - 12 ℅

நைட்ரஜன்  = 52 -55 ℅

கார்பன் டை ஆக்சைடு = 3 ℅

கலோரி மதிப்பீடு  : 1300 கி. கலோரி/ மீ3

பயன்கள் :

* உலோகவியலில் ஒடுக்கும் காரணியாகவும். 

 * இது எஃகு உற்பத்தித் தொழிற்சாலைகளில் எரிபொருளாகப் பயன்படுகிறது.

2. நீர் வாயு : ( CO & H2)

நீர் வாயு என்பது கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களின் கலவையாகும். 

தயாரிப்பு :

 கல்கரியின் மீது 1000°C வெப்பநிலையில் நீராவி யைச் செலுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. 

  இது " தொகுப்பு வாயு " என்றும் அழைக்கப்படுகிறது 

நீர் வாயுவின் இயைபு :

ஹைட்ரஜன்  = 51 ℅

கார்பன் மோனாக்சைடு = 41 ℅

நைட்ரஜன் = 4 ℅

கார்பன் டை ஆக்சைடு = 4 ℅

கலோரி மதிப்பீடு : 2800 கி. கலோரி/ மீ3

பயன்கள்

 * இது மெத்தனால் மற்றும் எளிய ஹைட்ரோ கார்பன்களை உற்பத்தி செய்ய பயன்படுகிறது. 

 * தொழிற்சாலைகளில் எரிபொருளாகப் பயன்படுகிறது. 

* இது ஹைட்ரஜன் வாயுவின் மூலமாக பயன்படுகிறது. 

3. பகுதி நீர் வாயு :

  இயைபு :

ஹைட்ரஜன்  = 12 ℅

மீத்தேன் = 3℅

கார்பன் மோனாக்சைடு  = 30℅

கார்பன் டை ஆக்சைடு = 2 ℅

நைட்ரஜன் = 53 ℅

கலோரி மதிப்பீடு : 1700 கி. கலோரி/ மீ3

பயன்கள் :

 * எரிபொருளாகப் பயன்படுகிறது. 

 * அம்மோனியா தயாரிப்பதற்கான மூலமாக நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் பயன்படுகிறது.

4. நிலக்கரி வாயு :

     இது ஹைட்ரஜன், மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கலவையாகும். 

 தயாரிப்பு :


   நிலக்கரியைச் சிதைத்து வடிப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. 

   சிதைத்து வடித்தல் என்பது காற்றில்லா சூழ்நிலையில் நிலக்கரியை வெப்பப்படுத்துவதாகும். 

நிலக்கரியின் இயைபு :

ஹைட்ரஜன்  = 40 ℅

மீத்தேன் = 32 ℅

ககார்பன் மோனாக்சைடு = 7 ℅

எத்திலீன்  = 2 ℅

ஈத்தேன் = 3 ℅ 

நைட்ரஜன் = 4 ℅

கார்பன் டை ஆக்சைடு = 1℅

இதர = 4 ℅

கலோரி மதிப்பீடு : 4900 கி. கலோரி/ மீ3

பண்புகள்

 * இது நிறமற்ற வாயு.

 * காற்றைவிட இலேசானது. 

 * நீண்ட சுவாலையுடன் எரியக்கூடிய துடுப்பாட்டப்

பயன்கள் :

 * இது உலோகவியலில் ஒடுக்கும் பொருளாகவும் இவ்வாயு பயன்படுகிறது. 

 * இது எரிபொருளாகப் பயன்படுகிறது. 

5. எண்ணெய் வாயு :

  இயைபு

மீத்தேன் = 25 - 30 ℅

ஹைட்ரஜன் = 50 - 55℅

கார்பன் மோனாக்சைடு = 10 - 12 ℅

கார்பன் டை ஆக்சைடு = 3 ℅

கலோரி மதிப்பீடு :  4500 - 5400 கி.கலோரி/ மீ3

பயன்கள்

 * இது ஆய்வகத்தில் எரிபொருளாகப் பயன்படுகிறது. 

6. உயிரி - வாயு :

    உயிரி வாயு என்பது மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு வாயுக்களின் கலவையாகும். 

தயாரிப்பு :


  இது கரிமப் பொருள்களை உண்டுபண்ணும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகளைச் சிதைவடையும் செய்து உருவாக்கப்படுகிறது. காற்றில்லா சூழ்நிலையில் கரிமப் பொருள்கள் சிதைவடையும் பொழுது உயிரி - வாயு உருவாகிறது. 

 இது ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலத்திற்கு உதாரணமாகும்.

 


 



கருத்துகள்

popular content