இயற்கை வாயு
இயற்கை வாயு :
* இது மீத்தேன், உயர் ஆல்கேன்கள் மற்றும் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஹைட்ரஜன் சல்பைடு ஆகிய வாயுக்களை உள்ளடக்கிய கலவையாகும்.
இயற்கை வாயுவின் இயைபு :
மீத்தேன் - 88 ℅
ஈத்தேன் - 5.5 ℅
புரோப்பேன் - 4.0 ℅
பியூட்டேன் - 1.5 ℅
பென்டேன் - 0.5 ℅
* இயற்கை வாயுவில் மீத்தேன் மற்றும் ஈத்தேன் போன்ற கீழ்நிலை ஹைட்ரோ கார்பன்கள் இருந்தால், அது " உலர் வாயு " எனப்படுகிறது.
இயற்கை வாயுவில் புரோப்பேன் மற்றும் பியூட்டேன் போன்ற உயர்நிலை ஹைட்ரோ கார்பன்கள் இருந்தால், அது "ஈர வாயு " என்று அழைக்கப்படுகிறது.
* இயற்கை வாயு சில நேரங்களில் எண்ணெயுடன் சேர்ந்தும் காணப்படுகிறது. இந்நிலையில் எண்ணெயுடன் சேர்ந்து மேற் பகுதிக்குக் கொண்டுவரப்படுகிறது. இது " இணைந்த வாயு " என்றழைக்கப்படுகிறது.
* இயற்கை வாயு வெப்பப்படுத்துவதற்கும், சமைப்பதற்கும், மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும் பயன்படுகிறது.
* இது திரிபுரா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம் ( கிருஷ்ணா,
கோதாவரி படுகைகள்) மற்றும் தமிழ்நாடு ( காவிரி டெல்டா) ஆகிய இடங்களில் காணப்படுகிறது.
இயற்கை வாயுவின் பயன்கள் :
* இது தொழிற்சாலைகளிலும், வீடுகளிலும் எரிபொருளாகப் பயன்படுகிறது.
* வெப்ப ஆற்றலின் மூலம் மின் உற்பத்தி செய்யும் மின் நிலையங்களில் பயன்படுகிறது
* பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பதிலாக வாகனங்களில் எரிபொருளாகப் பயன்படுகிறது.
* இயற்கை வாயுவை வெப்பப்படுத்தும்போது சிதைவடைந்து உருவாகும் ஹைட்ரஜன் உரம் உற்பத்தியில் பயன்படுகிறது.
* பல்வேறு வேதிப்பொருட்கள், செயற்கை இழைகள், கண்ணாடி, இரும்பு, பிளாஸ்டிக் மற்றும் பெயிண்ட் உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.
* இது மின்சாரம் உற்பத்தி செய்யப் பயன்படுகிறது
இயற்கை வாயுவின் நன்மைகள் :
* எரியும் பொழுது எந்த புகை, கழிவை தராததால் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுவதில்லை.
* இந்த வாயுவை குழாய்கள் மூலம் எளிதில் எடுத்துச்செல்ல முடியும்.
* இதனை வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் நேரடியாக எரிபொருளாகப் பயன்படுகிறது.
அழுத்தப்பட்ட இயற்கை வாயு (CNG ) :
* அதிக அழுத்தம் கொண்டு இயற்கை வாயுவை அழுத்தும் பொழுது அழுத்தப்பட்ட இயற்கை வாயு கிடைக்கிறது.
* இதன் முதன்மையான ஹைட்ரோ கார்பன் மீத்தேன் (88.5℅ ) ஆகும்.
* பெரிய சரக்கு வாகனங்களில் எடுத்துச் செல்வதற்காக இது திரவமாக்கப்படுகிறது. இது திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு எனப்படுகிறது.
* CNG அதிக அழுத்தத்திலும் LNG மிகக் குளிர்வூட்டப்பட்ட திரவ நிலையிலும் சேமித்து வைக்கப் படுகின்றன.
CNG - ன் பண்புகள் :
* இது மிகவும் மலிவான மற்றும் தூய்மையான எரிபொருள்.
* இதனைப் பயன்படுத்தும் வாகனங்கள் மிகக் குறைவான கார்பன் டை ஆக்சைடையும், ஹைட்ரோ கார்பன் புகை யையும் வெளியிடுகின்றன.
* பெட்ரோல் மற்றும் டீசலை விட மிகவும் விலை குறைந்தது.
CNG -யின் சராசரி இயைபு :
மீத்தேன் - 88.5℅
ஈத்தேன் - 5.5℅
புரோப்பேன் - 3.7℅
பியூட்டேன் - 1.8℅
பென்டேன் - 0.5 ℅
கருத்துகள்
கருத்துரையிடுக