பெட்ரோலியப் பொருட்கள்
* பெட்ரோலியம் என்பது லத்தீன் வார்த்தை. Petra (பெட்ரா) - பாறை, Oleum (ஒலியம்) - எண்ணெய்.
* பெட்ரோலியத்தை கச்சா எண்ணெய் அல்லது பாறை எண்ணெய் அல்லது தாது எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது.
புதைபடிம எரிபொருள் :
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கடலில் வாழ்ந்த தாவரங்களும், விலங்குகளும் இறந்த பின் மண்ணில் புதையுண்டன. அதிகப்படியான அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக அவை பெட்ரோலியமாக மாறியது.
கிடைக்கும் இடங்கள் :
* 1859 -ஆம் ஆண்டு அமெரிக்காவில் பென்சில்வேனியா பகுதியில் முதன்முதலில் பெட்ரோலியம் கண்டறியப்பட்டது.
* 1867 - ஆம் ஆண்டு இந்தியாவில் அஸ்ஸாமில் மக்கும் பகுதியில் பெட்ரோலியம் கண்டறியப்பட்டது.
* குவைத், ஈராக், பெர்சியா, ரஷ்யா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் அதிக அளவில் பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் நாடுகளாகும்.
* இந்தியாவில் பெட்ரோலியமானது அஸ்ஸாம், குஜராத், மும்பை ( மகாராஷ்டிரா) மற்றும் கோதாவரி, கிருஷ்ணா ( ஆந்திரா), காவிரி ( தமிழ்நாடு) ஆற்றுப் படுகைகளில் கிடைக்கிறது.
* பூமிக்கு அடியிலிருந்து துளையிட்டு பெறப்படும் பண்படுத்தப்பட்ட எண்ணெய் கருமை நிற திரவமாகும் ( கச்சா எண்ணெய்).
கசடு எண்ணெய் சுத்திகரித்தல் :
* பெட்ரோலியம் ( கசடு எண்ணெய்) என்பது கருமை நிற எண்ணெய் ஆகும்.
* இதில் பல்வேறு பகுதிப் பொருள்களான பெட்ரோலிய வாயு, பெட்ரோல், டீசல், உயவு எண்ணெய் மற்றும் பாரபின்மெழுகு போன்றவற்றை உள்ளடக்கியது.
* பெட்ரோலியம் சுத்திகரிப்பு என்பது பெட்ரோலியத்தின் பகுதிப் பொருட்களை பின்னக்காய்ச்சி வடித்தல் கலன் மூலம் பிரித்தெடுப்பது ஆகும்.
* வெவ்வேறு கொதிநிலை கள் கொண்ட திரவங்களின் கலவையை வெப்பப்படுத்தும் குளிரச் செய்து பிரித்தெடுக்கும் முறை "பின்னக்காய்ச்சி வடித்தல்" எனப்படும்.
* கசடு எண்ணெயானது உலையின் அடியில் அனுப்பப்பட்டு 400°C வெப்பப் படுத்தப்படுகிறது. ஆவி மேலெழும்பி பகுதிப்பொருள்கள் அவற்றின் கொதிநிலைக்கு ஏற்ப குளிர்விக்க ப்படுகிறது. பல்வேறு பெட்ரோலியத்தின் பகுதிப்பொருள்கள் பின்னக்காய்ச்சி வடித்தலில் கிடைக்கிறது. அவையாவன.
1. பெட்ரோலியம் வாயு :
கொதிநிலை : 40°C - க்கு கீழ்.
பயன்கள் : வீடுகளில் எரிபொருளாக.
2. பெட்ரோல் :
கொதிநிலை : 40 - 160°C
பயன்கள் : வாகனங்களுக்கு எரிபொருளாக
3. மண்ணெண்ணெய் :
கொதிநிலை : 160 - 250°C
பயன்கள் : அடுப்பு மற்றும் ஜெட் விமானத்தில் எரிபொருளாக.
4. டீசல் :
கொதிநிலை : 250 - 300°C
பயன்கள் : கனரக வாகனங்களில்
எரிபொருளாக.
5. உயவு எண்ணெய் :
கொதிநிலை : 300 - 350°C
பயன்கள் : உயவு பொருளாக
6. எரிபொருள் எண்ணெய் :
கொதிநிலை : 350 -;400°C
பயன்கள் : கப்பல் மற்றும் மின் நிலையத்தில் எரிபொருளாக.
7. பாரபின்மெழுகு :
கொதிநிலை : 380 - 400°C
பயன்கள் : மெழுகு மற்றும் வாசலின்
தயாரிக்க.
8. பிட்டு மென்பொருள் :
கொதிநிலை : 400°C -க க்கு மேல்
பயன்கள் : பெயிண்ட் மற்றும் சாலைபோட.
* பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு விலிருந்து பல பயனுள்ள பொருள்களை பெற முடிவதால் அவற்றை " பெட்ரோ கெமிக்கல்ஸ் " எனலாம்.
இவைகளை தூய்மையாக்கி இழைகள், பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
* இயற்கை வாயுவிலிருந்து பெறப்படும் " ஹைட்ரஜன் வாயு " உரங்கள் தயாரிக்க பயன்படுகின்றன.
* இதுபோன்ற வியாபார ரீதியான பல்வேறு பயன்களைப் பெற்றிருப்பதால் பெட்ரோலியத்தின் " கருப்பு தங்கம் " என அழைக்கப்படுகிறது.
* இந்த வேகத்தில் பெட்ரோலியத்தைப் பயன்படுத்தினால் 2050 - ஆம் ஆண்டு பூமியில் பெட்ரோலியம் முழுவதும் தீர்ந்து விடும்.
கருத்துகள்
கருத்துரையிடுக