தனிமங்கள் மற்றும் சேர்மங்கள்( சேர்மங்கள்)

சேர்மங்கள்:

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் இணைந்து உருவாகிறது.

           2H2 + O2  → 2H2O.

இங்கு, ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் நிறை விகிதம் ( 1 : 8) ஆகும்.

சேர்மத்தின் சிறப்பியல்புகள்:

1. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் வேதியியல் முறையில் இணைந்து சேர்மத்தை உருவாக்குகிறது.

2. ஒரு சேர்மத்திலுள்ள பகுதிப் பொருள்களை இயற்பியல் முறைப்படி பிரிக்க இயலாது.

3. ஒரு சேர்மம் உண்டாகும்போது வெப்பம் வெளியிடுதலோ அல்லது உறிஞ்சுதலோ நிகழ்கின்றது.

4. ஒரு சேர்மம் ஒரு குறிப்பிட்ட உருகுநிலை மற்றும் கொதிநிலையைப் பெற்றிருக்கிறது.

5. சேர்மத்தின் பண்புகள், அதன் பகுதிப் பொருள்களின் பண்புகளில் இருந்து வேறுபடுகின்றன.

6. சேர்மம் ஒருபடித்தானவை.

சேர்மங்களின் வகைகள்:

அ) கனிமச் சேர்மங்கள்
ஆ) கரிமச் சேர்மங்கள்

) கனிமச் சேர்மங்கள்:

இவை உயிரற்ற மூலங்களிலிருந்து( மண், பாறை, தாதுக்கள்) பெறப்படுகிறது.

எ.கா. சோடியம் கார்பனேட்,                                         கால்சியம் கார்பனேட்
            சோடியம் பை கார்பனேட் போன்றவை.

ஆ) கரிமச் சேர்மங்கள்:

இவை உயிருள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படுகிறது.

எ.கா. புரதம், எண்ணெய், சர்க்கரை போன்றவை.

சேர்மத்தின் மூலக்கூறு:

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு வகை அணுக்களைக் கொண்டவை சேர்மத்தின் மூலக்கூறு ஆகும்.

எ.கா. HCl, NaCl, KCl etc.,

வாய்பாடு:

ஒரு தனிமத்தின் மூலக்கூறைக் குறிப்பதற்கு பயன்படுத்துவது வாய்பாடு ஆகும்.

சேர்மத்தின் பயன்கள்:

1. ரொட்டிச் சோடா:                              (சோடியம் பை கார்பனேட்)

அ) தீயணைக்கும் சாதனங்களில்,
ஆ) பேக்கிங் பவுடர் தயாரிப்பில்,
இ) கேக், ரொட்டி தயாரிப்பில் பயன்படுகிறது.

2. சலவைச் சோடா:(சோடியம் கார்பனேட்)

அ) காகிதம், சோப்பு, வண்ணப்பூச்சுகள் தயாரிக்கவும்,
ஆ) துணி துவைக்கவும், தூய்மையாக்கியாகவும் ,
இ) பண்பறி மற்றும் பருமனறி பகுப்பாய்வில் முக்கிய ஆய்வுக்கூட காரணியாகவும்,
ஈ) கடன நீரை மென்னீராக மாற்றவும் பயன்படுகிறது.

3. சலவைத்தூள்: (கால்சியம் ஆக்ஸி குளோரைடு)

அ) சலவைத் தொழிலில் துணிகளை வெளுக்க,
ஆ) கிருமி நாசினியாகவும், பூச்சிக்கொல்லியாகவும்,
இ) குடிநீர் சுத்திகரிப்பிலும்,
ஈ) வேதித் தொழிற்சாலையில் ஆக்சிஜனேற்றியாகவும் பயன்படுகிறது.

4. சாதாரண உப்பு:   (சோடியம் குளோரைடு)

அ) உணவைகெடாமல் பாதுகாக்க,
ஆ) மீன், இறைச்சி போன்றவை கெடாமல் பாதுகாக்கப் பயன்படுகிறது.

5. சுட்ட சுண்ணாம்பு:     (கால்சியம் ஆக்ஸைடு)

சிமெண்ட் மற்றும் கண்ணாடித் தயாரிப்பில் பயன்படுகிறது.

6. நீற்றிய சுண்ணாம்பு:   (கால்சியம் ஹைட்ராக்ஸைடு) 

சுவர்களில் வெள்ளையடிக்கப் பயன்படுகிறது.

7. சுண்ணாம்புக்கல்:  
 (கால்சியம் கார்பனேட்) 

சுண்ணக்கட்டி தயாரிக்கப் பயன்படுகிறது.

8. பாரிஸ் சாந்து: (கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட்)

அ) சிலைகள் வார்ப்பதற்கும்,
ஆ) மருத்துவ மனைகளில் எலும்பு முறிவுகளை சரிசெய்யவும், பல் மருத்துவத்திலும்,
இ) பளபளப்பான தளங்கள் அமைக்கவும், சுவரில் வண்ணந்தீட்டவும், போலிக்கூரைகள் அமைக்கவும்,
ஈ) Chalk தயாரிக்கவும், விளையாட்டுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் செய்யவும்,
உ) ஆய்வுக்கூடங்களின் உபகரணங்களில் உள்ள இடைவெளியை காற்றுப்புகாமல் மூடி வைக்கவும் பயன்படுகிறது.

9. காப்பர் சல்பேட் - பூச்சிக்கொல்லியாக.

10. பொட்டாசியம் நைட்ரேட் - வெடிமருந்தாக.





கருத்துகள்

popular content