அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் ( காரங்கள்)
காரங்கள்:
* நீரில் கரைந்து ஹைட்ராக்ஸைடு அயனிகளைத் தருபவை காரங்கள் எனப்படுகின்றன.
* காரங்கள் கசுப்புச் சுவையையும், சோப்பு போன்ற வழவழப்புத் தன்மையையும் கொண்டுள்ளன.
* காரங்கள் சிவப்பு லிட்மஸ் தாளை நீலநிறமாக மாற்றுகின்றன.
* காரங்கள் பீனாஃப்தலினுடன் இளஞ்சிவப்பு நிறத்தையும், மெத்தில் ஆரஞ்சுடன் மஞ்சள் நிறத்தையும் தருகின்றன.
* உலோக ஆக்சைடு மற்றும் ஹைட்ராக்சில் சேர்மங்கள் காரங்களாகும்.
* காரங்கள் நீருடன் சேர்ந்து ஹைட்ராக்ஸைடு அயனிகளைக் கொடுக்கும்.
* நீரில் கரையும் காரங்களுக்கு "அல்கலிஸ்" என்று பெயர்.
எ.கா. Ca, Na, K - ஆகியவற்றின் ஹைட்ராக்ஸைடுகள்.
* எல்லா அல்கலிசுகளும் காரங்களாகும். ஆனால் எல்லா காரங்களும் அல்கலிசுகள் அல்ல.
* "அல்கலி" - என்ற வார்த்தை அராபிக் ( ஆல்குவிலி) சொல்லிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் "மரச்சாம்பல்" என்பதாகும்.
* மரச்சாம்பலில் உள்ள வேதிப்பொருள் Na மற்றும் K - ன் கார்பனேட்டுகளாகும்.
* வலிமைமிக்க காரங்கள் அரிக்கும் தன்மையுடையவை.
* காரங்கள் சிறந்த மின்கடத்திகளாகும்.
* எரிசோடா (அ) காஸ்டிக் சோடா என்பது - சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH).
* எரிபொட்டாஷ் (அ) காஸ்டிக் பொட்டாஷ் என்பது -பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (KOH).
* சலவை சோடா என்பது - சோடியம் கார்பனேட் ( Na2 CO3).
* சமையல் சோடா (அ) ரொட்டி சோடா என்பது - சோடியம் பை கார்பனேட் (NaHCO3).
* சுட்டச் சுண்ணாம்பு என்பது - கால்சியம் ஆக்சைடு (CaO).
* நீற்றுச் சுண்ணாம்பு என்பது- கால்சியம் ஹைட்ராக்சைடு ( Ca(OH)2.
* மெக்னீசியா பால்மம் (அ) அமில நீக்கி என்பது - Mg(OH)2.
* மென்சோப்பில் உள்ள காரங்கள் - NaoH, KOH.
காரங்களின் வகைகள்:
1. அயனியாதல் அடிப்படையில்,
அ. வலிமைமிகு காரங்கள்.
இவை நீரில் முழுவதுமாக அயனியுறுகின்றன.
எ.கா. NaOH, KOH போன்றவை.
ஆ. வலிமை குறைந்த காரங்கள்.
இவை நீரில் பகுதியளவே அயனியுறுகின்றன.
எ.கா. NH4OH, Ca(OH)2 போன்றவை.
2. அமிலத்துவத்தின் அடிப்படையில்,
அ. ஓர் அமிலத்துவ காரங்கள்.
இவை நீரில் அயனியுற்று ஒரு மூலக்கூறு காரத்திற்கு ஒரு ஹைட்ராக்சைடு அயனியைத் தருபவை.
எ.கா. NaOH, KOH போன்றவை.
ஆ. ஈர் அமிலத்துவ காரங்கள்.
இவை நீரில் அயனியுற்று ஒரு மூலக்கூறு காரத்திற்கு இரண்டு ஹைட்ராக்சைடு அயனியைத் தருபவை.
எ.கா. Ca(OH)2, Mg(OH)2 போன்றவை.
இ. மூன்று அமிலத்துவ காரங்கள்.
இவை நீரில் அயனியுற்று ஒரு மூலக்கூறு காரத்திற்கு மூன்று ஹைட்ராக்சைடு அயனியைத் தருபவை.
எ.கா. Al(OH)3, Fe(OH)3 போன்றவை.
3. செறிவின் அடிப்படையில்,
அ. செறிவுமிகு காரங்கள்.
இவை நீரில் காரங்களின் சதவீதத்தை அதிகளவு கொண்டுள்ளன.
ஆ. செறிவுகுறைந்த (அ) நீர்த்த காரங்கள்.
இவை நீரில் காரங்களின் சதவீதத்தை குறைந்தளவு கொண்டுள்ளன.
காரங்களின் வேதிப்பண்புகளின்:
1. உலோகங்களுடன் காரத்தின் வினை:
உலோகங்கள் காரங்களுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியிட்டு, அதனுடைய ஆக்ஸைடுகளைத் தருகின்றன.
எ.கா. துத்தநாகம், NaOH உடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியிட்டு சோடியம் ஜிங்கேட்டைத் தருகிறது.( except Cu, Ag and Cr ).
Zn + 2NaOH ➡ Na2ZnO2 + H2⬆
2. அலோக ஆக்சைடுகள் காரத்தின் வினை:
அலோக ஆக்சைடுகள் அமிலத்தன்மை உடையவை. இவை காரத்துடன் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தருகின்றன.
எ.கா. சோடியம் ஹைட்ராக்சைடு, கார்பன் - டை - ஆக்சைடுடன் வினைபுரிந்து சோடியம் கார்பனேட்டையும், நீரையும் தருகிறது.
2NaOH + CO2 ➡ Na2CO3 + H2O.
3. நீருடன் காரங்களின் வினை:
நீரில் கரைக்கும்போது காரங்கள் ஹைட்ராக்சைடு அயனியைத் தருகிறது.
NaOH ➡ Na+ + OH ¯
4. காரங்கள் அமிலங்களுடன் வினை:
அமிலத்திற்கும், காரத்திற்கும் இடையே ஏற்படும் வினையை நடுநிலையாக்கல் வினை என்கிறோம்.
NaOH + HCl ➡ NaCl + H2O.
காரங்களின் பயன்கள்:

1. NaOH - சோப்புத் தயாரிக்கப் பயன்படுகிறது. மேலும் காகிதத் தொழிற்சாலை, ஆடைகள், மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
2. Ca(OH)2 - கட்டிடங்களுக்கு வெள்ளையடிக்கப் பயன்படுகிறது.
3. Mg(OH)2 - வயிற்று உபாதைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
4. NH4OH - துணிகளில் உள்ள எண்ணெய் கரை மற்றும் பிசுக்கினை நீக்கப் பயன்படுகிறது.
* உரங்கள், நைலான்கள், நெகிழிகள், இரப்பர் தயாரிக்கப் பயன்படுகிறது.
Casino in Las Vegas, NV - Mapyro
பதிலளிநீக்கு› casinos › casinos Casino in Las 수원 출장샵 Vegas, NV is a fun and easy to travel, offering 진주 출장마사지 slots, 의왕 출장안마 blackjack, 삼척 출장안마 poker, roulette, live entertainment and more. 부산광역 출장안마