தனிமங்கள் மற்றும் சேர்மங்கள்( கேள்வி - பதில்)

1. விழாக்காலங்களில் பலூன்களில் நிரப்பப்படும் வாயு ஹீலியம்(He).

2. ஒளிரும் விளக்கு உருவாக்க பயன்படும் வாயு கிரிப்டான்(Kr).

3. அதிக ஒளிரக்கூடிய விளக்குகளில் உள்ள வாயு செனான்(Xe).

4. பற்பசையில் உள்ள தனிமம் புளூரின்(F).

5. கதிரியக்க தன்மையுள்ள வாயு ரேடான்(Rn).

6. தாவர இலையின் பச்சை நிறத்திற்கு காரணம் மெக்னீசியம்(Mg).

7. பட்டாசு வெடிக்கும் போது உருவாகும் வண்ண நிறத்திற்கு காரணம் ஸ்டிரான்சியம்(Sr).

8. பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகமுள்ள தனிமம் பொட்டாசியம்(K).

9. செல்போனில் உள்ள சிம்கார்டில் உள்ள தனிமம் சிலிக்கான்(Si).

10. மின்கலங்களில் அதிகம் பயன்படுத்தும் தனிமம் லித்தியம்(Li).

11.மின்விளக்குகளில் ஒளிரும் பகுதி தயாரிக்க பயன்படும் தனிமம் டங்ஸ்டன்(W).

12. வெப்பநிலைமானிகளில் பயன்படும் தனிமம் பாதரசம் ( மெர்குரி - Hg).

13. செல்போன் தயாரிக்க பயன்படும் தனிமம் டேன்டலம்(Ta).

14. நீரை தூய்மைபடுத்த பயன்படும் தனிமம் குளோரின்(Cl).

15. விளையாட்டு பொருட்கள் தயாரிக்க பயன்படும் தனிமம் போரான்(B).

16. புரதசத்தில் அதிகம் உள்ள தனிமம் நைட்ரஜன்(N).

17. பற்கள் உறுதியாக இருக்க அதிகம் பயன்படும் தனிமம் கால்சியம்(Ca).

18. எலும்பு வளர்ச்சிக்கு பயன்படும் முக்கிய தனிமம் பாஸ்பரஸ்(P).

19. LED -யில் பயன்படும் தனிமம் காலியம்(Ga).

20. LCD -யில் பயன்படும் தனிமம் இண்டியம்(In).

21. X - ray படம்பிடித்தலில்(Diagnosis) பயன்படும் தனிமம் பேரியம்(Ba).

22. MRI- Diagnosis( படம்பிடித்தலில்) பயன்படும் தனிமம் கடோலினியம்(Gd).

23. அணுக்கடிகாரத்தில் பயன்படும் தனிமம் சீசியம்(Cs).

24. பேனா முனை தயாரிப்பில் பயன்படும் தனிமம் ஆஸ்மியம்(Os).

25. கிருமிநாசினியாகப் பயன்படும் தனிமம் அயோடின்(I).

26. படச்சுருளில் பயன்படும் தனிமம் புரோமின்(Br).

27. பெயிண்ட் தயாரிப்பில் பயன்படும் தனிமம் காட்மியம்(Cd).

28. காந்தம் தயாரிப்பில் பயன்படும் தனிமம் கோபால்ட்(Co).

29. குறைவெப்பநிலை வெப்பநிலைமானியில் பயன்படும் தனிமம் தாலியம்(Tl).

30. மிதிவண்டி சக்கரம் தயாரிப்பில் பயன்படும் தனிமம் ஸ்கேண்டியம்(Sc).

கருத்துகள்

கருத்துரையிடுக

popular content