தாமிரத்தின் உலோகவியல்
தாமிரத்தின் உலோகவியல் :
குறியீடு : Cu
அணுநிறை : 63.55
அணு எண் : 29
எ. அமைப்பு : 2,8,18,1
இணைதிறன் : 1,2
💐 உரோமானியர்களால் இது குப்ரம் என அழைக்கப்பட்டது. ஏனெனில், சைப்ரஸ் என்னும் தீவிலிருந்து எடுக்கப்பட்டதால், அவ்வாறு அழைக்கப்பட்டது.
காப்பரின் தாதுக்கள் :
1. காப்பர் பைரைட்ஸ் - CuFeS2
2. குப்ரைட் (அ) ரூபி காப்பர் - Cu2O
3. காப்பர் கிளான்ஸ் - Cu2S
காப்பரின் முக்கியத்தாது :
காப்பர் பைரைட்
உலகக் காப்பர் உற்பத்தியில் 76 % இதிலிருந்து பெறப்படுகிறது.
தாமிரத்தைக் காப்பர் பைரைட்டிலிருந்து பிரித்தெடுத்தல் :
1. தூளாக்கலும், செறிவூட்டலும்.
2. வறுத்தெடுத்தல்.
3. உருக்கிப்பிரித்தல்.
4. பெஸ்ஸிமராக்குதல்.
5. தூய்மையாக்கல்.
1. தூளாக்கலும், செறிவூட்டலும் :
தூளாக்கப்பட்ட தாது நுரைமிதப்பு முறையில் அடர்பிக்கப்படுகிறது.
2. வறுத்தெடுத்தல் :
அடர்ப்பிக்கப்பட்ட தாதுவானது ஆக்ஸிஜன் முன்னிலையில் வறுக்கப்படுகிறது.வறுத்தலின் போது ஈரப்பதம், ஆவியாகும் மாசுக்கள் நீக்கப்படுகிறது.
சல்பர், பாஸ்பரஸ், ஆர்சனிக், ஆண்டிமனி ஆகியவை ஆக்சைடுகளாக மாற்றி நீக்கப்படுகின்றன.
காப்பர் பைராட்டானது காப்பர், இரும்பு சல்பைடுகளாக மாறுகிறது.
3. உருக்கிப்பிரித்தல் :
வறுக்கப்பட்ட தாதுவானது தூளாக்கப்பட்ட கார்பன், மணலுடன் கலந்து சூடேற்றும்போது மட்டியும் ( Cu2S + FeS), கசடும் உருவாகும். கசடை நீக்க வேண்டும்.
4. பெஸ்ஸிமராக்குதல் :
உருகிய மாட்டியைப் பெஸ்ஸிமர் மாற்று உலையிலிட்டுச் சூடேற்றும்போது கொப்புளக் காப்பர் உருவாகும். மாட்டியில் உள்ள இரும்பு சல்பைடு ஆக்சிஜனேற்றம் அடைந்து, இரும்பு ஆக்சைடாக மாறுகிறது. இது சிலிகாவுடன் சேர்ந்து கசடாக மாறும்.
2FeS + 3O2 ➡ 2FeO + 2SO2 ⬆
FeO + SiO2 ➡ FeSiO3 ( கசடு )
இரும்பு சிலிக்கேட்
2Cu2S + 3O2 ➡ 2Cu2O + 2SO2 ⬆
2Cu2O + Cu2S ➡ 6Cu + SO2 ⬆
கொப்புளக்காப்பர்
5. தூய்மையாக்கல் :
98 % காப்பரும், 2 % மாசுக்களும் உள்ள கொப்புளக் காப்பரை மின்னாற் பகுப்பின் மூலம் தூய்மை செய்யலாம்.
மின்னாற் தூய்மையாக்கல் :
இம்முறையில் மிகத் தூய காப்பர் கிடைக்கிறது.
1. கேத்தோடு - தூய மெல்லிய காப்பர் தகடு.
2. ஆனோடு - மாசுக கலந்த காப்பர்.
3. மின்பகுளி - கந்தக அமிலம் கலந்த காப்பர் சல்பேட் கரைசல்.
மின்பகுளியின் வழியாக மின்சாரத்தைச் செலுத்தும்போது தூய காப்பர் எதிர்மின் முனையிலும், மாசுக்கள் நேர்மின்முனையின் அடியிலும் படிகின்றன. நேர்மின் முனையின் அடியில் படியும் மாசுக்கள் ஆனோடு மாசுக்கள் எனப்படும்.
தாமிரத்தின் பண்புகள் :
இயற்பண்புகள் :
🎂 செம்பழுப்பு நிற உலோகம்.
🎂 பளபளப்பானது.
🎂 அதிக அடர்த்தி கொண்டது.
🎂 இதன் உருகுநிலை 1356 ゜C.
வேதிப் பண்புகள் :
1. காற்றுடனும், ஈரப்பதத்துடனும் வினை:
தாமிரம், ஈரப்பதக்காற்றுடன் வினைபுரிந்து பச்சை நிறக் கார காப்பர் கார்பனேட் படலத்தை உருவாக்கும்.
2Cu + O2 + CO2 + H2O ➡ CuCO3 ⏺Cu(OH)2.
2. சூடேற்றுவினை :
தாமிரம், ஆக்ஸிஜனுடன் வெவ்வேறு வெப்பநிலைகளில் சேர்ந்து குப்ரிக் ஆக்சைடு ( கறுப்பு நிறம் - CuO ), குப்ரஸ் ஆக்சைடு ( சிவப்பு நிறம் - Cu2O ) உருவாக்குகிறது.
<1370 k
2Cu + O2 ➡ 2CuO
குப்ரிக் ஆக்சைடு ( கறுப்பு நிறம் )
>1370 k
4 Cu + O2 ➡ 2Cu2O
குப்ரஸ் ஆக்சைடு ( சிவப்பு நிறம் )
3. அமிலங்களுடன் வினை :
காற்றில்லாச் சூழ்நிலையில் காப்பர் நீர்த்த HCl, H2SO4 உடன் வினைபுரிவதில்லை. ஆனால் காற்றின் முன்னிலையில் வினைபுரிந்து தாமிரத்தின் உப்புகளை தருகிறது.
4. குளோரினுடன் வினை :
குளோரினுடன் வினைபுரிந்து காப்பர் குளோரைடு உருவாகிறது.
Cu + Cl2 ➡ CuCl2.
5. காரங்களுடன் வினை :
தாமிரம் காரங்களுடன் வினைபுரிவதில்லை.
தாமிரத்தின் பயன்கள் :
💐 மின்கம்பிகளையும், மின் உபகரணங்களையும் உருவாக்கப் பயன்படுகிறது.
💐 கலோரி மீட்டர், பாத்திரங்கள், நாணயங்கள் போன்றவற்றை உருவாக்கப் பயன்படுகிறது.
💐 மின்முலாம் பூசப் பயன்படுகிறது.
💐 தங்கம், வெள்ளி இவற்றோடு உலோகக்கலவையாகி நாணயங்களையும், அணிகலன்களையும் உருவாக்கப் பயன்படுகிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக