உலோகவியல்

உலோகவியல் :

⭐ உலகில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட உலோகம் காப்பர் என்னும் தாமிரம்.

⭐ போர் உலோகங்கள் :
       டைட்டேனியம் (Ti), குரோமியம் (Cr), மாங்கனீசு (Mn), ஜிர்கோனியம் (Zr).

⭐ அணு ஆயுத உற்பத்தியில் பயன்படும் உலோகம் யுரேனியம் (U).

⭐ நாணய உலோகங்கள் :
      தாமிரம்( Cu),  வெள்ளி (Ag),                           தங்கம்( Au) .

⭐ அணிகலன்கள் உருவாக்க 22 கேரட் தங்கம் பயன்படுத்தப்டுகிறது. இதில் 22 பாகம் தங்கம், 2 பாகம் தாமிரம் உள்ளது.

⭐ தங்கத்தின் தூய்மையைக் "கேரட்" என்ற அலகால் குறிக்கிறோம்.

                     22/24 × 100 = 91.6 %

⭐ 1 கிராம் தங்கத்தை 2 கிலோமீட்டர் தூரத்திற்கு மெல்லிய கம்பியாக நீட்ட முடியும்.

⭐ Ag, Au, Pt மற்றும் சில உலோகங்கள் தனித்த நிலையில் இயற்கையாகக் கிடைக்கின்றன.

⭐ சில்வர் தனித்த நிலையிலும், சேர்ம நிலையிலும் கிடைக்கின்றன.

உலோகவியலில் நயன்படும் கலைச் சொற்கள் :

கனிமங்கள் :

ஒரு கனிமம் என்பது, தனித்த சேர்மமாகவோ அல்லது பல சேர்மங்களின் கூட்டுக் கலவையாகவோ புவியில் காணப்படும்.

தாதுக்கள் :

எந்த ஒரு குறிப்பிட்ட கனிமத்தில் இருந்து சேர்மநிலையில் உலோகம், எளிதாக இலாபகரமான முறையில் பெருமளவு பிரித்தெடுக்க முடிகிறதோ அந்தக் கனிமம் தாது எனப்படும்.

🍁 சான்றாக,                                                             களிமண் (Al2O3.2SiO2.2H2O) மற்றும் பாக்ஸைட் (Al2O3. 2H2O) ஆகியவை அலுமினியத்தின் கனிமங்களாகும்.

🍁 ஆனால், அலுமினியத்தை பாக்ஸைட் கனிமத்திலிருந்து மட்டுமே இலாபகரமாகப் பிரித்தெடுக்கப்படுவதால், அலுமினியத்தின் தாது பாக்ஸைட் ஆகும். களிமண் அதன் கனிமமாகும்.

சுரங்கமுறை :

புவியின் பரப்பில் காணும் பெரும்பகுதி மூலத்திலிருந்து, தாதுக்களைப் பிரித்தெடுக்கும் முறைக்கு சுரங்கமுறை என்று பெயர்.

கனிமங்களுக்கும், தாதுக்களுக்கும் உள்ள வேறுபாடுகள் :

கனிமங்கள் :

💠 உலோகம் குறைந்த சதவீதமே காணப்படும்.

💠 கனிமங்களிலிருந்து உலோகத்தை எளிதில் பிரிக்க இயலாது.

தாதுக்கள் :

 💠 உலோகம் அதிக சதவீதம் காணப்படும்.

💠 தாதுக்களிலிருந்து உலோகத்தை இலாபகரமாகவும், எளிய முறையிலும் பிரிக்க இயலும்.

🔴 "அனைத்து கனிமங்களும் தாதுக்களல்ல, ஆனால் அனைத்துத் தாதுக்களும் கனிமங்களே".

உலோகவியல் :

உலோகத்தை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கும் வெவ்வேறு படிநிலைகளையும் அதை தூய்மைப்படுத்துதலையும் விவரிக்கும் பகுதியே உலோகவியல் எனப்படும்.

தாதுக்கூளம் :

தாதுப்பொருள்களுடன் கலந்துள்ள மண், களிமண், பாறை தொடர்பான மாசுக்கள் " தாதுக்கூளம்" எனப்படும்.

இளக்கி :

 தாதுக்களில் கலந்துள்ள மாசுக்களை நீக்க உருகிடும் சேர்மமாக மாற்ற சேர்க்கப்படும் பொருளே இளக்கி எனப்படும்.
எ.கா. கால்சியம் ஆக்சைடு (CaO), சிலிக்கா (SiO2).

கசடு :

உலோகத்தைப் பிரித்தலில் இளக்கி தாதுக்கூளத்துடன் வினைபுரிந்து உருவாகும் விளைபொருளே கசடு எனப்படும்.
        தாதுக்கூளம் + இளக்கி      ➡   கசடு

உருக்கிப் பிரித்தல் - ஆக்சிஜன் ஒடுக்கம்:

🔵 வறுத்த உலோக ஆக்சைடை உலோகமாக உருகிய நிலையில் மாற்றும் ஓர் ஒடுக்க வினையே உருக்கிப் பிரித்தல் ஆகும்.

🔵 இம்முறையில் மாசுக்கள், தாதுவுடன் சேர்க்கப்பட்ட இளக்கியால் நீக்கப்படுகிறது.

உலோகங்களின் மூலங்கள் :

🔷 80 தனிமங்கள் கனிம படிவாக புவிப்பரப்பிலோ,புவியின் அடியிலோ காணப்படுகின்றன.

🔷 குறைந்த வினைதிறன் உள்ள உலோகங்கள் தனித்த நிலையில் இயற்கையில் காணப்படுகின்றன.
எகா. தங்கம்,வெள்ளி, பிளாட்டினம் போன்றவை.

🔷 பெரும்பாலான உலோகங்கள், ஆக்சைடு தாதுக்களாகவும், கார்பனேட் தாதுக்களாகவும் , ஹேலைடு தாதுக்களாகவும், சல்பைடு தாதுக்களாகவும், சல்பேட் தாதுக்களாகவும் சேர்ந்த நிலையில் காணப்படுகின்றன.


ஆக்சைடு தாது :

1. பாக்ஸைட்  - Al2O3. 2H2O
2.  குப்ரைட் - Cu2O
3. ஹேமடைட்  -  Fe2O3
4.  ஜிங்கைட் - ZnO

 கார்பனேட் தாது :

1. மார்பிள் - CaCO3
2. மெக்னசைட் - MgCO3
3. சிடரைட் - FeCO3
4. காலமைன் - ZnCO3

ஹேலைடு தாது :

1. கிரையோலைட் - Na3AlF6
2. ஃப்ளூர்ஸ்பார் - CaF2
3. பாறை உப்பு - NaCl
4.  ஹார்ன் சில்வர் - AgCl

 சல்பைடு தாது :

 1. கலீனா - PbS
2. இரும்பு பைரைட் - FeS2
3. ஜிங்க் ப்ளன்டு  - ZnS
4.  சின்னபார் - HgS


கருத்துகள்

popular content