பூச்சித் தீங்குயிரிகள் ( உயிர்க் கொல்லிகள் )

பூச்சித் தீங்குயிரிகள்:

1. மெல்லும் பூச்சிகள்:

இவை வேர், தண்டு, இலைகளைக் கடித்து மெல்லும் பூச்சிகள்.
எ.கா. வெட்டுக்கிளிகள், கம்பளிப் பூச்சிகள் போன்றவை.

2. உறிஞ்சும் பூச்சிகள் :

இவை செல்சாற்றினை உறிஞ்சும் பூச்சிகள்.

எ.கா. இலைத்தத்துப் பூச்சிகள் , அசுவனி ( தாவரப்பேன் ) போன்றவை.

3. துளைக்கும் பூச்சிகள் :

இவை தாவரத்தின் பல பகுதிகளை துளைத்து தாவரத் திசுக்களை உணவாக எடுத்துக்கொள்ளும்.

எ.கா. கரும்புத்துளைப்பான்.

                    உயிர்க்கொல்லிகள்:

தாவரங்களுக்கும், பயிர்களுக்கும் தீங்கிழைக்கும் பூச்சித் தீங்குயிரிகளை அழிக்கப் பயன்படும் வேதிப்பொருட்கள் உயிர்க்கொல்லிகள் எனப்படும்.

உயிர்க்கொல்லிகள் மூன்று வகைப்படும். அவை,

1. பூச்சிக்கொல்லிகள் ( Insecticides )
2. பூஞ்சை அல்லது காளான் கொல்லிகள் ( Fungicides )
3. களைக்கொல்லிகள் ( Herbicides )

1. பூச்சிக்கொல்லிகள் ( Insecticides )

 பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் வேளாண்மையில் கிட்டதட்ட 20 %  பொருளாதார இழப்பு தீங்கிழைக்கும் பூச்சிகளால் ஏற்பட்டது. இவற்றை தடுக்க பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்பட்டன.

பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்கள்:

அ. அலிஃபாட்டிக் ஹைட்ரோ கார்பன்கள்.
ஆ. அரோமேட்டிக் ஹைட்ரோ கார்பன்கள்
இ. பாஸ்பரஸ் அதன் வழிப்பொருட்கள்.
ஈ. குளோரின் போன்ற ஹேலஜன்கள்.etc,.

 பூச்சிக்கொல்லிகள் இருவகைப்படும்.

a.  குளோரின் சேர்ந்த பூச்சிக்கொல்லிகள்.

எ.கா.  DDT, BHC.

b. பாஸ்பரஸ் சேர்ந்த பூச்சிக்கொல்லிகள்.

எ.கா. பாராதையான்.

DDT( டைகுளோரோ டைபினைல் ட்ரைகுளோரோ ஈத்தேன் ) :

தயாரிப்பு :

 கந்தக அமில முன்னிலையில் குளோரோ பென்சீனை குளோராலுடன்   ( ட்ரை குளோரோ அசிட்டால்டிஹைடு) குறுக்க வினைக்குட்படுத்தி DDT தயாரிக்கப்படுகிறது.
                                                  99% H2SO4
2 C6H5Cl     +    Cl3C-CHO          ➡
                                                 30 டிகிரி C

                2C6H5Cl - CH - CCl3   (DDT ).

DDT -ன் IUPAC பெயர் :

2,2-பிஸ் ( பாரா குளோரோபினைல் ) -1,1,1 - ட்ரைகுளோரோ ஈத்தேன்.

DDT -  ன் நன்மைகள் :

🎂 இது ஒரு வலிமைமிக்க பூச்சிக்கொல்லியாகும்.

🎂 கொசுக்கள், ஈக்கள், பயிர்களை அழிக்கும் உயிரினங்களை கொல்லும் தனிப்பட்ட சக்தி இதற்கு உண்டு.

🎂 இது மலேரியாவை கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.

தீமைகள் :

💐 இது மனித இனத்திற்கும் ( சிறுநீரக கல் ), பறவைகளுக்கும் ( தோல் முட்டையிடுவது ), மீனினங்களுக்கும் நச்சுத்தன்மையுடையது.

💐 இதனை அதிகளவில் பயன்படுத்தினால் உயிரியல் சிதைவுக்கு உள்ளாகாது.

பூச்சிக்கொல்லிகள் என்பது ,

👍 கரிம குளோரின்

👍 கரிம பாஸ்பரஸ்

👍 கார்பமேட் போன்ற கரிம குடும்பத்தை சார்ந்தவை.

DDT என்பது  –-------------

👌 கரிம குளோரின் பூச்சிக்கொல்லி

👌 டைகுளோரோ டைபினைல் ட்ரைகுளோரோ ஈத்தேன்

👌 இதனை முதன்முதலில் தயாரித்தவர் ஜெய்ட்லர்.

👌 இதன் பூச்சிக்கொல்லி பண்பை கண்டறிந்தவர் பால்முன்னர்.

DDT - ன் தொகுப்புக்கு பொருந்துவது,

👍 2 மோல் குளோரோ பென்சீன் மற்றும் 1 மோல் குளோரால்.

👍 99% கந்தக அமிலம்.

👍 30 டிகிரி C - ல் வெப்பப்படுத்தப்படுகிறது.

👍 பாரா இடத்தில் வினைநிகழ்ந்து விளைப்பொருளை தருகிறது.

BHC ( பென்சீன் ஹெக்ஸா குளோரைடு) :

இது காம்மெக்ஸேன் அல்லது லிண்டேன் அல்லது HCH எனவும் அழைக்கப்படுகிறது.

தயாரிப்பு :

 பென்சீன் புற ஊதாக்கதிர்கள் முன்னிலலயில் குளோரினுடன் வினைப்பட்டு பென்சீன் ஹெக்ஸா குளோரைடைத் தருகிறது.
                                     UV light
  C6H6      +     3Cl2       ➡       C6H6Cl6.

🎂 இது வியாபார ரீதியில்  BHC எனப்படுகிறது.

🎂 இதன் பூச்சிக்கொல்லித் தன்மை அதிலுள்ள காமெக்ஸேன் அல்லது லிண்டேன் எனக்கூறப்படும் காமா அமைப்பினால் ஏற்படுகிறது.

🎂 BHC ன் காமா ஐசோமரின் பெயர் லிண்டேன் அல்லது காமெக்ஸேன்.

🎂 இதில் 9 விதமான கனப்பரிமான மாற்றுக்கள் உள்ளன.

2.  பூஞ்சைக்கொல்லிகள் ( Fungicides ) :

 பூஞ்சைகளை கொல்லுவதற்கு பயன்படும் வேதிப்பொருட்கள் பூஞ்சைக்கொல்லிகள் ஆகும்.

எ.கா. போர்டாக்ஸ் கலவை.

போர்டாக்ஸ் கலவை என்பது 2.24 கிலோ மயில்துத்தம்,  2.24 கிலோ சுட்டச் சுண்ணாம்பு மற்றும் 50 காலன் தண்ணீர் கலந்த கலவை ஆகும்.

3. களைக்கொல்லிகள் ( Herbicides ) :

 பயிர்களில் தேவையற்ற களைச்செடிகளை நீக்குவதற்கு பயன்படுத்தும் வேதிப்பொருள் களைக்கொல்லிகள் ஆகும்.

எ.கா.  💐  டாலபேன்
             💐 மெட்டாக்ளோர்
             💐 2 , 4  -D  ( 2,4 - டைகுளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம் ).

4. எலிக்கொல்லிகள் ( Rodenticide ) :

  எலிகள், சுண்டெலிகள், அணில்கள் போன்ற கொறிக்கும் விலங்குகளைக் கொல்லப் பயன்படும் வேதிப்பொருள் எலிக்கொல்லிகள் ஆகும்.

எ.கா.   💐  துத்தநாகப் பாஸ்பேட்.
              💐 ஆர்சனிக்.

👍 வேரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் பூச்சிக்கொல்லி குளோரோபைரிபாஸ்.

👍தண்டையும், இலையையும் கடித்துத்துளைக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பூச்சிக்கொல்லிகள்

 🎂 மாலத்தியான்.
 🎂 லிண்டேன்.
 🎂 தையோடான்.

👍 சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பூச்சிக்கொல்லிகள்

 🎂 டை மீத்தோயேட்.
 🎂 மெட்டாசிஸ்டாக்ஸ்.

உயிரியல் உருப்பெருக்கம் :

 உயிரிகளின் உடலின் திசுக்களில் DDT  கலப்பதற்கு உயிரியல் உருப்பெருக்கம் எனப்படும்.

எ.கா. பறவைகள் தோல் முட்டை இடுவது.

கருத்துகள்

கருத்துரையிடுக

popular content