உணவு தரக்கட்டுப்பாடு

   * இந்திய அரசாங்கம் 1954 -ஆம் ஆண்டு உணவு கலப்படம் தடுப்புச் சட்டம் மற்றும் 1955 ஆம் ஆண்டு உணவு கலப்பட தடுப்பு விதிகள் போன்ற உணவுப் பாதுகாப்புச் சட்டங்களை இயற்றியது. 

   * விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் குறைந்தபட்ச தரம் மற்றும் மேம்பட்ட சுகாதாரத்தை பெற்றிருக்க வேண்டும் என்று இந்த உணவுப் பாதுகாப்புச் சட்டம் தெளிவாக வலியுறுத்துகிறது. 

*  உணவுப் பாதுகாத்தலை  ஊக்குவிப்பதற்காக வும்  அதன் முன்னேற்றத்திற்காகவும் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 -ஆம் தேதி உலக சுகாதார தினத்தன்று " பண்ணை முதல் உண்ணும் வரை பாதுகாத்திடுவீர் உணவை" என்ற முழக்கம் எழுப்பப்பட்டது. 

  * நம் நாட்டிலுள்ள உணவு தரக்கட்டுப்பாடு நிறுவனங்கள்:

    ISI, AGMARK, FPO, FCI மற்றும் இதர சுகாதாரத் துறைகள் நுகர்வோர் பயன்படுத்தும் பொருள்களுக்கு குறைந்தபட்ச தர நிர்ணயங்களை  விதித்துள்ளன. 

FCI - (Food Corporation of India -இந்திய உணவுக் கழகம்) :


   * 1965 -ஆம் ஆண்டு கீழ்க்கண்ட நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது. 

1. விவசாயப் பொருட்களுக்கு சரியான விலை கொடுத்து விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பது. 

2. நாடு முழுவதும் உணவு தானியங்களை விநியோகம் செய்வது. 

3. தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான அளவு உணவு தானியங்களை விநியோகம் செய்வது மற்றும் தேவையான அளவு சேமித்து வைத்து உணவுப் பாதுகாப்பை நிலை நிறுத்துவது. 

4. உணவு தானியங்களை நுகர்வோர் வாங்கும் விதத்தில் சந்தை விலையை ஒழுங்குபடுத்துதல். 

    உணவு தரக்கட்டுப்பாடு நிறுவனங்கள் அவற்றின் நிர்ணயிக்கப்பட்ட குறியீடுகள் மற்றும் உணவு பாதுகாத்தல் அவைகளின் பங்கு :

   1. ISI


(Indian Standard Institute - இந்திய தரக்கட்டுப்பாடு நிறுவனம்) ஆனது BIS (Bureau of Indian Standard)  என்றும் அழைக்கப்படுகிறது. 

  ISI - ன்  பங்கு :

   தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் மின் பொருள்களான சுவிட்சுகள், கேபிள் ஒயர்கள், நீர் சூடேற்றி, மின்சார மோட்டார், சமையலறையில் பயன்படுத்தும் பொருள்கள் முதலியவற்றிற்கு சான்றளிக்கிறது. 

2. AGMARK


(Agricultural Marking)  வேளாண் பொருளுக்கான தரக் குறியீடு. 

  AGMARK - ன் பங்கு :

  விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்திப் பொருள்களின் தானியங்கள், எண்ணெய்கள்,  பருப்பு வகைகள், தேன், வெண்ணெய் முதலியவற்றிற்கு சான்றளிக்கிறது. 

3. FPO


(Fruit Products Order - கனி உற்பத்திப் பொருள்கள் ஆணை) :

   FPO - ன் பங்கு:

   பழ உற்பத்திப் பொருரள்களான  பழரசம், ஜாம்கள், சாஸ், பதப்படுத்தப்பட்ட கனிகள் மற்றும் காய்கறிகள், ஊறுகாய் கள் முதலியவற்றிற்கு சான்றளிக்கிறது. 

4. FSSAI


(Food Safety and Standards Authority of India - இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம்) :

    FSSAI - ன் பங்கு :

   உணவுப் பாதுகாப்பைக் கண்காணிப்பது மற்றும் ஒழுங்குபடுத்துவதின் மூலம் பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது இந்த ஆணையத்தின் பொறுப்பாகும். 




கருத்துகள்

popular content