உணவு கலப்படம்
💐 உணவுக் கலப்படம் என்பது "உணவில் வேறு ஏதேனும் பொருள்களை சேர்ப்பதே அல்லது உணவிலிருந்து நீங்குவதோடு ஆகும்.
💐 கலப்படத்திற்காக உபயோகப்படுத்தப்படும் பொருள் கலப்படப் பொருள் எனப்படும்.
💐 உணவுக் கலப்படம் பொருள்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
💐 1.இயற்கையான கலப்படப் பொருள்கள்
2. தெரியாமல் சேர்க்கப்படும் கலப்படப் பொருள்கள்
3. தெரிந்தே சேர்க்கப்படும் கலப்படப் பொருள்கள்
💐1. இயற்கையான கலப்படப் பொருள்கள்;
அ. சிலவகை நச்சுக்காளான்களில் காணப்படும் நச்சுப்பொருட்கள்.
* ஆப்பிள் விதைகளில் காணப்படும் புரூசிக் அமிலம்.
* செர்ரி மற்றும் பீச் பழங்களின் குழிகள், கடல் நச்சுகள், மீன் எண்ணெயின் நச்சுப் படுதல் போன்றவை.
ஆ. சுற்றுப்புறத்தில் காணப்படும் மாசுபட்ட காற்று, நீர் மற்றும் நிலம்.
2. தற்செயலாக/ தெரியாமல் சேர்க்கப்படும் கலப்படப் பொருள்கள்;
உணவு பொருளைக் கையாளும் போதும், அதனை கலன்களில் அடைக்கும் போதும், அறியாமையினால் அல்லது கவனக் குறைவால் சேர்க்கப்படும் கலப்படப் பொருள்கள் இதில் அடங்கும்.
அவையாவன:
அ. பூச்சிக்கொல்லி மருந்துகளின் எஞ்சிய வேதிப்பொருட்கள்.
ஆ. உணவுப் பொருட்கள் சேமிக்கும் இடங்களில் கொறிக்கும் பிராணிகள் மற்றும் பூச்சிகளின் பல ஜலங்கள், எலிக்கடிகள் மற்றும் லார்வாக்கள் தோன்றுதல்.
இ. கனிகள், காய்கறிகள், உடனடியாக உண்ணும் இறைச்சி மற்றும் கோழிப்பண்ணை தயாரிப்புகளில் எஸ்செரிச்சியா கோலி, சால்மோனெல்லா இனம் போன்ற நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகளின் தாக்கம்.
3. தெரிந்தே சேர்க்கப்படும் கலப்படப் பொருள்கள்;
இந்த கலப்படப் பொருள்கள் இலாப நோக்கத்திற்காக வேண்டுமென்றே சேர்க்கப்படுகின்றன.
அ. உணவுப் பாதுகாப்புப் பொருள்களான வினிகர், சிட்ரிக் அமிலம், சோடியம் பை கார்பனேட் ( சமையல் சோடா) , பாலில் சேர்க்கப்படும் ஹைட்ரஜன் பெராக்சைடு, செயற்கை மாவுப்பொருள், உணவு நறுமணப் பொருள்கள், செயற்கை வேதிப்பொருள்கள் மற்றும் செயற்கை இனிப்பூட்டும் பொருள்கள் போன்றவை.
1. உணவு பதப்படுத்திகள்:
வினிகர், சோடியம் பென்சோயேட், பென்சாயிக் அமிலம், சோடியம் நைட்ரேட்
செயல்பாடு:
நுண்ணுயிரிகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து உணவைப் பாதுகாக்கின்றன.
2. நிறமிகள் :
கரோட்டினாய்டுகள், ஆந்தோசயனின், குர்குமின்.
செயல்பாடு:
உணவிற்கு இனிய நிறத்தைக் கொடுக்கின்றன.
3. செயற்கை இனிப்பூட்டிகள் :
சாக்கரீன், சாக்லேட்
செயல்பாடு:
உணவில் இனிப்புச் சுவையைக் கூட்டுகின்றன.
4. சுவையூட்டிகள் ;
மோனோ சோடியம் குளுட்டமேட், கால்சியம் டை குளுட்டமேட்
செயல்பாடு :
உணவு வகைகளின் சுவையை மேம்படுத்துகின்றன.
5. எதிர் ஆக்சிஜனேற்றிகள் :
வைட்டமின் சி, வைட்டமின் இ, கரோட்டின்.
செயல்பாடு :
ஆக்சிஜனேற்றத்தைத் தடுத்து உணவின் தன்மையைக் கெடாமல் பாதுகாக்கின்றன. நம்மை இதய நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன.
ஆ. வாழைப்பழங்கள் மற்றும் மாம்பழங்களைப் பழுக்க வைப்பதற்கு பயன்படுத்தப்படும் கால்சியம் கார்பைடு.
இ. பச்சைக் காய்கறிகள், பாகற்காய், பச்சைப் பட்டாணி போன்றவற்றில் பசுமை நிறத்தைக் கொடுப்பதற்காக காரீய உலோகம் கலந்த அங்கீகரிக்கப்படாத உணவு நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இவை காய்கறிகளில் வாடிய நிலை தோன்றாமல் இருப்பதற்காக சேர்க்கப்படுகின்றன.
ஈ. ஆப்பிள் மற்றும் பேரிக்காய் போன்ற கனிகளின்மேல் பளபளப்பான தோற்றத்தைக் கொடுப்பதற்காக உண்ணக்கூடிய ஆனால் தீங்கு விளைவிக்கும் செயற்கை மெழுகு செல்லாக் அல்லது கார்னோபா மெழுகு போன்றவை சேர்க்கப்படுகின்றன.
கலப்படம் செய்யப்பட்ட உணவுகளால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் :
காய்ச்சல், வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, வாயுக் கோளாறுகள், ஆஸ்துமா, நரம்புக் கோளாறுகள், தோல் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்படைதல், மலக்குடல் புற்றுநோய் மற்றும் குறைபாடுகளுடன் குழந்தை பிறத்தல் போன்றவை.
கருத்துகள்
கருத்துரையிடுக