உலோகக்கலவை

உலோகக்கலவை :

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்கள் அல்லது அலோகங்கள் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து ஒன்றோடொன்று உருக்கும்போது உருவாகும் ஒருபடித்தான கலவையே உலோகக்கலவை ஆகும்.

உலோகக்கலவைகளைத் "திடக்கரைசல்" எனவும் அழைக்கலாம்.

எந்த உலோகத்தின் செறிவு அதிகமாக இருக்கிறதோ அது "கரைப்பான்" என்றும், செறிவு குறைந்த உலோகம் "கரைபொருள்" என்றும் அழைக்கப்படும்.

உதாரணமாக, பித்தளை என்ற திடக்கரைசலில் துத்தநாகம் கரைபொருளாகவும், காப்பர் கரைப்பானாகவும் காணப்படும்.

உலோகக்கலவைகளை உருவாக்கும் முறைகள்:

 🎂 உலோகங்களை உருக்கிச் சேர்த்தல்.
🎂 நன்கு உருக்கப்பட்ட உலோகங்களை அழுத்தத்திற்கு உட்படுத்துதல்.

இசக்கலவை:

இரசக்கலவை என்பது பாதரசத்துடன் சோடியம், வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்கள் சேர்த்து உருவாக்கப்படுவது ஆகும்.

பல் பாதுகாப்பில் இரசக்கலவை :

 🎂 இது பாதரசம், வெள்ளி, வெள்ளீயம் முதலிய உலோகங்களின் கலவையாகும்.
🎂 இது பற்குழிகளை அடைக்கப் பயன்படுகிறது.

இரும்பின் உலோகக்கலவைகள்:

 1. துருப்பிடிக்காத எஃகு(Fe,C,Ni,Cr):

பண்புகள்:

பளபளப்பானது, அரிப்பைத் தடுப்பது, இழுவிசை அதிகம்.

பயன்கள்:

பாத்திரங்கள், வெட்டும் கருவிகள், வாகன உதிரி பாகங்கள் செய்ய பயன்படுகிறது.

2. நிக்கல் எஃகு(Fe, C, Ni):


பண்புகள்:

கடினமானது, எளிதில் அரிக்கப்படாதது, மீள்விசை அதிகம்.

பயன்கள்:

 கம்பிகள், விமானத்தின் உதிரி பாகங்கள், உந்திகள் செய்ய பயன்படுகிறது.

உலோகங்களின் அரிமானம்:

 வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜன், ஈரக்காற்று, மாசுக்களால் சில உலோகங்கள் பளபளப்பை இழந்து சிதையும் நிகழ்விற்கு "அரிமானம்" என்பது பொருள்.

🎂இவ்வரிமானத்தின்போது உலோகம், உலோகச்சேர்மமாக வளிமண்டலத்துடன் நடக்கும் வேதிவினைகளால் மாறிவிடும்.

உலோக அரிமானத்தைத் தடுக்கும் முறைகள் :

1. வண்ணப்பூச்சு பூசுதல் :

உலோகப் பரப்பில் பூசிடும் வண்ணப் பூச்சுக்கள் காற்று, ஈரப்பதத்தை நெருங்கவிடாமல் தடுக்கின்றன.

2. எண்ணெய், பசைப்பூச்சுகள் :

உலோகப் பரப்பில் பூசிடும் எண்ணெய், பசைப் பூச்சுக்கள் காற்றுயும், ஈரப்பதத்தையும் நெருங்கவிடாமல் தடுக்கின்றன.

3. உலோகக்கலவையாக்கல் :

 மற்ற உலோகங்களுடன் சேர்ந்து உருவாகும் உலோகக் கலவைகளால் அரிமானம் தடுக்கப்படும்.
எ.கா. துருப்பிடிக்காத எஃகு.

4. நாகமுலாம் பூசுதல் :

இரும்பின் மீது துத்தநாகம் மின்முலாம் பூசுவதற்கு "நாகமுலாம் பூசுதல்" என்று பெயர்.

🎂 இது துருப்பிடித்தலைத் தடுக்கும்.
🎂 இம்முலாம் பூசுவதால் துத்தநாகக் கார்பனேட் என்னும் பாதுகாப்புப் படலம் இரும்பின் மேல் படிகிறது.
🎂 இஃது அரிமானத்தைத் தடுக்கிறது.

5. மின்முலாம் பூசுதல் :

 ஓர் உலோகத்தை மற்றோர் உலோகத்தின் மேல் மின்சாரத்தின் மூலம் பூசுவதற்கு "மின்முலாம் பூசுதல்" என்று பெயர்.

🎂 இம்முறை அரிமானத்திலிருந்து பாதுகாப்பளிக்கும், பளபளப்பை அதிகரிக்கும்.

6. தன் அழிவுப் பாதுகாப்பு :

இரும்பின் மேல் மெக்னீசியம் பூசிடும்போது தன் அதிக வினை செயல்திறனால்  வளிமண்டல வாயுக்களுடன் மெக்னீசியம் வினைபுரிந்து இரும்பை பாதுகாக்கிறது.

இரும்பு துருப்பிடித்தல் :

 வளிமண்டலத்திலுள்ள ஈரப்பதமும், பிற வாயுக்களும் இரும்பின் புறப்பரப்பின்மீது பட்டு கீழ்க்கண்ட வேதிவினை நிகழ்கிறது.

Fe   ➡  Fe++   +  2eー

O2  +  2H2O   +  4eー   ➡  4OHー

Fe++  அயனியானது, Fe3+ அயனியாக ஆக்ஸிஜனேற்றமடைந்து, OHー அயனியுடன் சேர்ந்து ஃபெரிக் ஹைட்ராக்ஸைடைத் தருகிறது. இது நீரேறிய இரும்பு (lll) ஆக்சைடாக மாறும். இதுவே "துரு" (Fe2O3 ・xH2O) எனப்படும்.

கருத்துகள்

popular content