அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் ( உப்புகள் )
உப்புகள் :
அமிலங்களுக்கும் , காரங்களுக்கும் இடையே நிகழும் நடுநிலையாக்கல் வினையின் மூலம் கிடைக்கும் விளைபொருள்களே உப்புகளாகும்.
NaOH + HCl ➡ NaCl + H2O.
உப்புகளின் வகைகள் :
1. சாதாரண உப்புகள் :
ஓர் அமிலம் மற்றும் காரம் இவற்றின் முழுமையான நடுநிலையாக்கலின் பொழுது சாதாரண உப்ப கிடைக்கிறது.
NaOH + HCl ➡ NaCl + H2O.
எ.கா. NaCl, NaBr, Nal போன்றவை.
2. அமில உப்புகள் :
இவை உலோகமானது அமிலத்திலுள்ள ஹைட்ரஜன் அணுக்களை பகுதியளவை வெளியேற்றுவதால் உருவாகின்றன.
பல காரத்துவ அமிலத்தை ஒரு காரத்தினால் பகுதியளவு நடுநிலையாக்கி பெறப்படுகின்றன.
NaOH + H2SO4 ➡ NaHSO4 + H2O.
(அமில உப்பு)
3. கார உப்புகள் :
இவை ஈர் அமிலத்துவ அல்லது மூன்று அமிலத்துவ காரங்களிலுள்ள ஹைட்ராக்ஸைடு அயனிகளை ஓர் அமிலத்தால் பகுதியளவு வெளியேறச் செய்து பெறப்படுகின்றன.
Pb(OH)2 + HCl ➡ Pb(OH)Cl + H2O.
( கார உப்பு)
4. இரட்டை உப்புகள் :
சமமான மூலக்கூறு எடைவிகித அளவுகளில் இரண்டு எளிய உப்புகளின் நிறைவுற்ற கரைசல்களைச் சேர்த்து படிகமாக்கும்போது இரட்டை உப்புகள் உருவாகின்றன.
எ.கா.
பொட்டாஷ் படிகாரம் -
K2SO2 . Al2(SO4) .24 H2O
மோர்ஸ் உப்பு - FeSO4 . ( NH4)2SO4 .6H2O
உப்புகளின் பயன்கள் :
1. சோடியம் குளோரைடு ( NaCl ) :
🎂 நம் அன்றாட உணவிலும், உணவைப் பாதுகாப்பதிலும் பயன்படுகிறது.
🎂 NaOH மற்றும் Na2CO3 போன்ற பல கனிம சேர்மங்களின் தயாரிப்பில் பயன்படுகிறது.
2. சலவை சோடா ( சோடியம் கார்பனேட் )
(Na2CO3. 10 H2O)
🎂 இது கடினநீரை மென்னீராக மாற்ற பயன்படுகிறது.
🎂 இது வீடுகளில் சுத்தப்படுத்தும் பொருளாக பயன்படுகிறது.
🎂 இது பண்பறி பகுப்பாய்வு மற்றும் பருமனறி பகுப்பாய்வில் முக்கியமான ஆய்வக கரணியாகப் பயன்படுகிறது.
🎂 இது கண்ணாடி, காகிதம், பெயிண்ட் தயாரிக்கப் பயன்படுகிறது.
🎂 இது துணி வெளுக்கப் பயன்படுகிறது.
3. சமையல் சோடா (NaHCO3 ) :(சோடியம்பைகார்பனேட் )
💐 இது ரொட்டி சோடா தயாரிக்கப் பயன்படுகிறது.
💐 ரொட்டி சோடா என்பது சமையல்சோடாவும், டார்டாரிக் அமிலமும் சேர்ந்த கலவையாகும். இது கேக் மற்றும் ரொட்டிகளை மென்மையாக மாற்றுகிறது.
💐 இது அமிலநீக்கியலுள்ள பகுதிப்பொருளாகும் (மெக்னீசியா பால்மம் - Mg(OH)2 ). இந்த கரைசல் காரத்தன்மை பெற்றிருப்பதால் வயிற்றிலுள்ள அதிகப்படியான அமிலத்தை நடுநிலையாக்குகிறது .
💐 தீயணைப்பான்களில் பயன்படுகிறது.
💐 இது தோல் நோய்த் தொற்றிற்கு எதிரான மென்மையான திசு அழுகல் எதிர்ப்பொருளாகப் பயன்படுகிறது.
4. சலவைத்தூள் ( CaOCl2 ) :
கால்சியம் ஆக்ஸி குளோரைடு.
🎂 இது குடிநீரிலுள்ள பாக்டீரியாக்களை அழிக்கப் பயன்படுகிறது.
🎂 இது பருத்தி மற்றும் லினன் துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது.
5. பாரீஸ் சாந்து ( CaSO4 . 1/2 H2O) :
(கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட்)
💐 இது முறிந்த எலும்புகளை ஒட்ட வைக்கவும், சிலைகளுக்கான வார்ப்புகளைச் செய்யவும் பயன்படுகிறது.
💐 கட்டுமானத் தொழிலில் இது அதிக அளவில் பயன்படுகிறது.
💐 பற்சீராக்கும் துறை, அணிகலன் உருவாக்கும் தொழில் போன்றவற்றில் பயன்படுகிறது.
6. சோடியம் ஹைட்ராக்சைடு ( NaOH ):
🎂 இது சோப்பு, காகிதம், செயற்கைப் பட்டு தயாரிப்பில் பயன்படுகிறது.
🎂 இது ஜவுளி தொழிலில், பருத்தி துணிககளை மேம்படுத்தப் பயன்படுகிறது.
🎂 இது பாக்சைட்டை (அலுமினியத்தின் முக்கிய தாது ) தூய்மைப்படுத்துதல் மற்றும் பெட்ரோலிய சுத்திகரிப்பில் பயன்படுகிறது.
🎂 இது ஆய்வக வினைக் கரணியாகப் பயன்படுகிறது.
7. ஜிப்சம் ( CaSO4 . 2H2O ) :
💐 உலர் பலகைகள், பூச்சுப் பலகைகள் தயாரிப்பில் பயன்படுகிறது.
💐 சுவர்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கவும், மேற்கூரைகள் மற்றும் அறைகளை பகுதிகளாக பிரிக்கவும் பூச்சுப் பலகைகள் பயன்படுகிறது.
💐 பாரீஸ் சாந்து தயாரிக்கப் பயன்படுகிறது. ஜிப்சத்தினை 300 டிகிரி பாரன்ஹுட்டில் சூடுபடுத்தி பாரீஸ்சாந்து தயாரிக்கப்படுகிறது. இது "ஜிப்சம் பூச்சு" எனவும் அழைக்கப்படுகிறது. முக்கியமாக இது சிற்பங்களை வடிப்பதில் பயன்படுகிறது.
💐 வேளாண்மைத் துறையில் மண்ணுடன் சேர்க்கப்படும் பொருளாகவும், கட்டுப்படுத்தியாகவும், உரமாகவும் பயன்படுகிறது.
💐 களிமண் மற்றும் இறுக்கமான மண்ணை நெகிழச் செய்வதுடன், தாவர வளர்ச்சிக்கு முக்கியமாக பயன்படும் கால்சியம் மற்றும் சல்பரை தரும் பொருளாக உள்ளது. மண்ணிற்கு அதிக உப்புத் தன்மையைத் தரும் Na+அயனிகளை நீக்கவும் பயன்படுகிறது.
💐 ஜிப்சம் முக்கியமாக இணைத்தல் மற்றும் கெட்டியாக்கும் பண்புகளைப் பெற்றிருபபதால் பற்பசை, ஷாம்புகள் மற்றும் முடித் தொடர்பான பொருட்களில் பயன்படுகிறது.
💐 போர்ட்லாண்டு சிமெண்டுகளில், ஜிப்சம் ஒரு முக்கியமான பகுதிப் பொருளாகும். இது கடினமாதலை தாமதப்படுத்தும் காரணியாக செயல்படும் தன்மையைப் பெற்றிருப்பதால் கான்கிரீட்டுகள் கடினமாகும் வேகத்தினைக் கட்டுப்படுத்துகிறது.
8. காப்பர் சல்பேட் ( CuSO4 ) :
🎂 பூச்சிக்கொல்லியாகப் பயன்படுகிறது.
9. பொட்டாசியம் நைட்ரேட் ( KNO3 ) :
🎂 வெடிமருந்து தயாரிக்க.

கருத்துகள்
கருத்துரையிடுக