அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
அமில, காரத் தரம்பார்த்தல்:
1. வீரியமிகு அமிலத்தையும், வீரியமிகு காரத்தையும் தரம்பார்த்தல்:
இத்தரம்பார்த்தலில் இறுதிநிலை PH- ன் மதிப்பு 4.0 - 10.0 ஆக உயர்கிறது. எனவே, இத்தரம்பார்த்தலுக்கு PH 3.5 - 10.5 என்ற எல்லைக்குள் நிறமாற்றம் அடையக்கூடிய ஒரு நிலைக்காட்டியே சிறந்தது.
எ.கா. மெத்தில் ஆரஞ்சு, லிட்மஸ், பினால்ஃப்தலீன்.
2. வீரியம் குறைந்த அமிலத்தையும், வீரியமிகு காரத்தையும் தரம்பார்த்தல்:
இறுதிநிலை PH - ன் மதிப்பு 6.5 - 10.0 க்கு மாற்றமடைகிறது. இத்தரம்பார்த்தலின் முடிவில் கிடைக்கும் வினைவிளைபொருளான உப்பு, நீராற்பகுப்பு வினையில் ஈடுபடுவதால் கரைசல் சிறிதளவு காரத்தன்மை பெற்றிருக்கும்.
இத்தரம்பார்த்தலுக்கு PH 6.5 - 10.0 என்ற எல்லைக்குள் நிறமாற்றம் அடையக்கூடிய ஒரு நிலைக்காட்டியே தேவை. எனவே, இதற்கு பொருத்தமான PH எல்லை PH 8.3 - 10.0 ஆகும். எனவே , இதற்கு பொருத்தமான நிலைக்காட்டி பினால்ஃப்தலீன். ஆனால் மெத்தில் ஆரஞ்சின் பணியாற்று எல்லை PH 5.0 -க்கு குறைவாக இருப்பதால் இது பொருதாதமற்றது.
3. வீரியமிகு அமிலத்தையும், வீரியம் குறைந்த காரத்தையும் தரம்பார்த்தல்:
இத்தரம்பார்தலின்போது இறுதிநிலையில் PH 3.5 - 7.0 ஆக உயர்கிறது. மேலும் இத்தரம்பார்த்தலின்போது கிடைக்கும் உப்பு நீராற்பகுப்படைவதால், கரைசல் அமிலத்ன்மை பெற்றிருக்கிறது. எனவே இதற்கு PH 3.0 - 7.0 என்ற எல்லைக்குள் நிறமாற்றம் அடையக்கூடிய எந்த நிலைக்காட்டியையும் பயன்படுத்தலாம்.
எ.கா. மெத்தில் ஆரஞ்சு , மெத்தில் சிவப்பு.
4. வீரியம் குறைந்த அமிலத்தையும், வீரியம் குறைந்த காரத்தையும் தரம்பார்த்தல்:
இத்தரம்பார்த்தலின்போது இறுதிநிலையில் PH மாற்றம் அதிகம் இருப்பதில்லை. ஏனெனில், இவ்வினையில் தோன்றும் உப்பு, பெருமளவில் நீராற்பகுப்பு அடைகிறது. எனவே, சாதாரணமாக பயன்படுத்தும் நிலைக்காட்டிகள் இதற்கு பயன்படாது.
இம்முறையில் தரம்பார்த்தலின் இறுதி நிலையைக் கணக்கிடுவது சாத்தியமன்று.
இவ்வகை தரம்பார்த்தலுக்கு மின்னழுத்தமானி கொண்டு தரம்பார்க்கலாம்.
அமில, கார நிலைக்காட்டிகள்:
1. நிலைக்காட்டி : மெத்தில் ஆரஞ்சு.
பணியாற்று எல்லையின் PH : 3.1 - 4.4
அமிலத்தில் நிறம் : சிவப்பு.
காரத்தில் நிறம் : மஞ்சள்.
2. நிலைக்காட்டி : மெத்தில் சிவப்பு.
பணியாற்று எல்லையின் PH : 4.4 - 6.2
அமிலத்தில் நிறம் : சிவப்பு.
காரத்தில் நிறம் : மஞ்சள்.
3. நிலைக்காட்டி : லிட்மஸ்.
பணியாற்று எல்லையின் PH : 5.0 - 8.0
அமிலத்தில் நிறம் : சிவப்பு.
காரத்தில் நிறம் : நீலம்.
4. நிலைக்காட்டி :புரோமோதைமால் நீலம்
பணியாற்று எல்லையின் PH: 6.0 - 7.6
அமிலத்தில் நிறம் : மஞ்சள்.
காரத்தில் நிறம் : நீலம்.
5. நிலைக்காட்டி : பீனால் சிவப்பு.
பணியாற்று எல்லையின் PH: 6.8 - 8.4
அமிலத்தில் நிறம் : மஞ்சள்.
காரத்தில் நிறம் : சிவப்பு.
6. நிலைக்காட்டி : கிரசால் சிவப்பு.
பணியாற்று எல்லையின் PH: 7.2 - 8.7
அமிலத்தில் நிறம் : மஞ்சள்.
காரத்தில் நிறம் : சிவப்பு.
7. நிலைக்காட்டி : பீனால்ஃப்தலீன்.
பணியாற்று எல்லையின் PH: 8.3 - 10.0
அமிலத்தில் நிறம் : நிறமற்றது.
காரத்தில் நிறம் : இளஞ்சிவப்பு.
8. நிலைக்காட்டி : தைமால்ஃப்தலீன்.
பணியாற்று எல்லையின் PH: 8.3 - 10.5
அமிலத்தில் நிறம் : நிறமற்றது.
காரத்தில் நிறம் : நீலம்.
9. நிலைக்காட்டி : அலிசரின் மஞ்சள்.
பணியாற்று எல்லையின் PH: 10.0 - 12.0
அமிலத்தில் நிறம் : மஞ்சள்.
காரத்தில் நிறம் : வெளிரிய ஊதா.
கருத்துகள்
கருத்துரையிடுக