பயன்பாட்டு வேதியியல்
நம் அன்றாட வாழ்வில் உணவுப்பொருட்கள், மருந்து பொருட்கள், உடைகள், அழகசாதனப் பொருட்கள் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட அலங்காரப் பொருட்கள் போன்ற பொருட்களைப் பயன்படுத்துகிறோம். இவை அவற்றின் தன்மை மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில் வேறுப்பட்ட இருந்தாலும், வேதியியலுக்கான தொடர்புடையவை. மேலும் இவை இயற்கையான மற்றும் செயற்கையான வேதிப்பொருட்களால் ஆனவை.
அன்றாட வாழ்வில் நாம் பல்வேறு வழிகளில் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்கிறோம். இத்தகைய இடையூறுகளே ஒவ்வொரு வேதியலாளர்களிடமிருந்தும் புதிய கருத்துக்களையும், கோட்பாடுகளையும் வெளிக்கொணர்கின்றன. உதாரணமாக, மக்கள் நோயினால் பாதிக்கப்பட்டபொழுது புதிய வேதிச் சேர்மங்கள் தொகுக்கப்பட்டு மருந்துகளாகப் பயன்படுத்தப்பட்டன.
நோய்களைக் கண்டறிவதற்காகவும் புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டன. விவசாயிகள் குறைந்த விளைச்சலினாலும், வயல்களில் காணப்படும் பூச்சிகளினாலும் பாதிக்கப்பட்டபொழுது, அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் வேதியியலாளர்கள் உருவாக்கினர்.
ஆகவே வேதியியல் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் பல்வேறு துறைகளில் சிறந்த விளைவுகளைப் பெறுவதற்கும், உலகின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவே, பயன்பாட்டு வேதியியல் என்று அழைக்கப்படுகின்றது.
பயன்பாட்டு வேதியியலின் பல்வேறு பிரிவுகள்:
1. நானோ வேதியியல்
2. மருந்தாகக் வேதியியல்
3. மின்வேதியியல்
4. கதிரியக்க வேதியியல்
5. சாய வேதியியல்
6. வேளாண் மற்றும் உணவு வேதியியல்
7. தடயவியல் வேதியியல்
கருத்துகள்
கருத்துரையிடுக