தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
தனிமங்களின் வகைப்பாட்டில் முற்காலக் கருத்துக்கள் :
1 லவாய்சியர் தனிம வகைப்பாடு : (1789)
ததனிமங்களை உஉலோகங்கள் மமற்றும் அலோகங்கள் என இரு பிரிவுகளாக வகைப்படுத்தினார்.
ஒவ்வொரு பிரிவிலும் பல விதிவிலக்குகள் இருந்ததால், இம்முறை திருப்திகரமான தாக்குதல் அமையவில்லை.
2. டாபர்னீரின் மும்மை விதி:(1817)
வேதிப் பண்புகளில் ஒன்றுபட்ட தனிமங்களை மும்மை அடுக்குகளாக வரிசைப் படுத்தினார். ஒரு மும்மை வரிசையின் மையத்தில் இடம்பெற்றுள்ள தனிமத்தின் அணுநிறை, அதே வரிசையிலுள்ள முதல் மற்றும் மூன்றாவது தனிமங்களின் அணு நிறைகளின் கூடுதலான சராசரி மதிப்பிற்குச் சமமாக இருக்கும்.
எ. கா : Li 9 Na 23 K39
அனைத்து தனிமங்களையும் மும்மை விதிப்படி வவரிசைப்படுத்த இயலவில்லை.
குறைகள்:
* டாபர்னீரால் அக்கால கட்டத்தில் மூன்று தொகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்களில் மட்டுமே மும்மைத் தனிமங்களைக் காண முடிந்தது. மேலும் எல்லா தனிமங்களும் மும்மை விதிக்கு உட்பட வில்லை.
* மிகக் குறைந்த அணுநிறை மற்றும் மிக அதிக அணுநிறை கொண்ட தனிமங்களுக்கு இவ் விதியைப் பயன்படுத்த முடியவில்லை.
2. நியூசிலாந்தின் எண்ம விதி :
( 1866)
1866 இல் ஜான் நியூசிலாந்து 56 அறியப்பட்ட தனிமங்களைக அவற்றின் அணுநிறையின் அடிப்படையில் ஏறு வரிசையில் ஒழுங்கமைத்தார். அவர் ஒவ்வொரு எட்டாவது தனிமமும் சங்கீதத்தில் எட்டாவது சுருதியும் முதல் சுருதியும் ( ச, ரி, க, ம, ப, த, நி, ச) ஒத்திருப்பதால் போல முதலாவது தனிமத்தின் பண்பை ஒத்திருப்பதைக் கண்டறிந்தார். இது "எண்ம விதி " என்று அறியப்பட்டது.
குறைகள் :
* முற்றிலும் மாறுபட்ட பண்புகளை உடைய சில தனிமங்கள் ஒரே தொகுதியில் வைக்கப்பட்டிருந்தன.
எ.கா ; கோபால்ட், நிக்கல், பலேடியம், பிளாட்டினம் மற்றும் இரிடியம் ஆகியவை ஹாலஜன் தொகுதியில் அமைக்கப் பட்டன.
* இரண்டு வேறுபட்ட தனிமங்கள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்தது.
எ. கா : கோபால்ட் மற்றும் நிக்கல்.
* எண்ம விதியானது கால்சியத்தை விட அதிக அணுநிறை கொண்ட தனிமங்களுக்கு ஏற்புடையதாக இல்லை.
* இந்த அட்டவணையானது 56 தனிமங்களுக்கு மட்டுமே போடப்பட்டது. பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது கூடிய தனிமங்களுக்கு இடமில்லை.
* பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வாயுக்கள் ( நியான், ஆர்கான்...) ஒன்பதாவது தனிமத்திற்கும முதலாம் தனிமத்திற்கும ஒத்த பண்பைக் காண்பித்தன.
எ. கா: புளோரின் மற்றும் சோடியத்திற்கு இடையில் வைக்கப்பட்ட நியான்.
கருத்துகள்
கருத்துரையிடுக