நிலக்கரி

 நிலக்கரி :

    சுமார் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரிய உருவ அளவு கொண்ட தாவரங்களான  பெரணி களும் ராசிகளும்  பூமியில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் மண்ணுக்கடியில் புதையுண்டன. இவை மெதுவாக சிதைந்து அடர்த்தியான மற்றும் பஞ்சு போன்ற பீட் எனப்படும் பொருளாக மாறின. காலப்போக்கில் அதிக வெப்பத்தினாலும், அசுத்தத்தினாலும் பீட் அழுத்தப்பட்டு நிலக்கரியாக  மாறியது. 

நிலக்கரியை வெட்டி எடுத்தல் :

    பூமியின் மேற்பரப்பிற்குக் கீழே உள்ள நிலக்கரிப் படு கையிலிருந்து நிலக்கரி வெளியே எடுக்கப்படுகிறது. 

 அ. மேற்பகுதி சுரங்கம் தோண்டுதல் :

   


பூமியின் மேற்பரப்பில் 22 அடி ஆழத்திற்குள் நிலக்கரிப் படுகைகள் இருக்குமானால் மேற்பகுதி மண் வெளியேற்றப்பட்டு நிலக்கரி தோண்டி எடுக்கப்படுகிறது. இது மேற்பகுதி சுரங்கம் தோண்டுதல் எனப்படும். 

ஆ. கீழ்பகுதி சுரங்கம் தோண்டுதல் :

   சில இடங்களில் பூமியின் மிக ஆழமான பகுதிகளில் நிலக்கரிப் படுகைகள் காணப்படுகின்றன. இந்நிலையில் பூமியின் ஆழத்தில் சுரங்கங்கள் தோண்டப்பட்டு நிலக்கரி பெறப்படுகிறது.  இது கீழ்பகுதி சுரங்கம் தோண்டுதல் எனப்படும். 

  * உலகளவில் சுமார் 70 நாடுகளில் நிலக்கரி இருப்புகள்
காணப்படுகின்றன. 

   * மிகப்பெரிய இருப்புகள் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் காணப்படுகின்றன. 

   * உலகளவில்  ஏறத்தாழ 30 சதவீத நிலக்கரியை உற்பத்தி சசெய்வதால் அமெரிக்கா நிலக்கரி இருப்பில் முதலாவதாகத் திகழ்கிறது. 

  * இந்தியாவில் நிலக்கரி வெட்டி எடுத்தல் 1774 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

  * உலகளவில் நிலக்கரி உற்பத்தியில் இந்தியா மூன்றாவது பெரிய நாடாகத் திகழ்கிறது. 

  * உலகத்தின் நிலக்கரி இருப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்காவிலும், சீனாவிலும் உள்ளது. 

நிலக்கரியின் வகைகள் :

   நிலக்கரியில் உள்ள கார்பன் மற்றும் வெப்ப ஆற்றலைப் பொருத்து நான்கு முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம். 

1 . லிக்னைட்

2 . துணை - பிட்டுமினஸ்

3 . பிட்டுமினஸ்

4 . ஆந்த்ரசைட்

1 .  லிக்னைட் :

    * இது பழுப்பு நிறமுடைய மிகவும் தரம் குறைந்த நிலக்கரியாகும். 

   * இது குறைந்த அளவு கார்பனைல் கொண்டுள்ளது. 

   * இதிலுள்ள கார்பனின் சதவீதம்            25 - 45 ℅ ஆகும்.

   * லிக்னைட் அதிக அளவு ஈரப்பதத்தையும், மொத்த நிலக்கரி இருப்பில் ஏறக்குறைய பாதியளவினையும் கொண்டுள்ளது. 

பயன்கள் :

  * இது மின்சார உற்பத்தியில் பயன்படுகிறது. 

  * தொகுப்பு முறையிலான இயற்கை வாயுவையும், உரம் பொருள்களையும் உற்பத்தி செய்ய லிக்னைட் பயன்படுகிறது. 

2. துணை - பிட்டுமினஸ் :

  * லிக்னைட் நிலக்கரி அடர் நிறமாகவும் கடினமாகவும் மாறும்பொழுது துணை பிட்டுமினஸ் நிலக்கரி உருவாகிறது. 

  * இது கருமை நிறமுடைய மந்தமான நிலக்கரி வகையாகும். 

  * லிக்னைட் வகையைவிட அதிகளவு வெப்பத்தை வெளியிடும் திறனைக் கொண்டது. 

  * இதிலுள்ள கார்பனின் சதவீதம்               35 - 44 ℅ ஆகும். 

பயன்கள் :

  * இது முதன்மையாக மின்சார உற்பத்தியில் எரிபொருளாகப் பயன்படுகிறது. 

  * இவ்வகை நிலக்கரியில்  பிற நிலக்கரி வகைகளைவிட குறைந்தளவு சல்பர் உள்ளது. எனவே, இது மாசுக்களை உருவாக்குவதில்லை. 

3. பிட்டுமினஸ் :

   * அதிகளவு இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களால் துணை பிட்டுமினஸ் நிலக்கரி பிட்டுமினஸ் வகை நிலக்கரியாக மாற்றம் பெற்றுள்ளது. 

  * இது அடர் கருமை நிறமும், கடினத்தன்மையையும் கொண்டது. 

  * இவ்வகை நிலக்கரியில் 45 - 86℅ கார்பன் உள்ளது. 

  * இது அதிகளவு வெப்ப ஆற்றலை பெற்றுள்ளது. 

பயன்கள் :

  * இது மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படுகிறது. 

  * இரும்பு மற்றும் எஃகு உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு கல்கரி வழங்குவதாகும். 

  * பெயிண்டுகள், நைலான் மற்றும் பல்வேறு வகையான பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. 

4. ஆந்த்ரசைட்

  * இது மிகவும் உயர்தரம் கொண்ட நிலக்கரி வகையாகும். 

  * இவ்வகை நிலக்கரி மிகவும் லேசான தாகவும், உயர்ந்த வெப்ப ஆற்றலைக் கொண்டதாகவும் உள்ளது. 

  * ஆந்த்ரசைட் நிலக்கரி கடினத்தன்மையையும், அடர் கருமை நிறத்தையும், பளபளக்கும் தன்மையையும் கொண்டது. 

  * இதிலுள்ள கார்பனின் சதவீதம்            86 - 97 ℅ ஆகும். 

  * இது பிட்டுமினஸ் நிலக்கரியை விட சற்று உயர்ந்த வெப்ப ஆற்றலை உடையது. 

பயன்கள் :

  * ஆந்த்ரசைட் நிலக்கரி நீண்ட நேரம் எரிந்து அதிக வெப்பத்தையும், குறைவான மாசுக்களையும் வெளியிடுகிறது. 

நிலக்கரியின் பயன்கள் :

  * நிலக்கரி வெப்பத்தையும், மின்சாரத்தையும் உற்பத்தி செய்யப் பயன்படுகிறது. 

  * உயவுப் பொருள்கள், நீர் ஒட்டி ஆடைகள், ரைசின்கள், அழகுசாதனப் பொருள்கள், ஷாம்பு மற்றும் பற்பசை போன்றவற்றை தயாரிக்கப் பயன்படும் சிலிக்கனின வழிப் பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.  

  *காகிதம் தயாரிப்பதில் நிலக்கரி பயன்படுகிறது.  

  * செயல்மிகு கரி முகப்பூச்சுக்களிலும், பிற அழகு சாதனப் பொருள்களிலும் பயன்படுகிறது

  * அலுமினா வைத்து தூய்மைப்படுத்தும் தொழிற்சாலைகளை உருவாக்க நிலக்கரி பயன்படுகிறது. 

  * நிலக்கரியிலிருந்து பெறப்படும் செயல்மிகு கரி நீர் மற்றும் காற்றைச் சுத்தப்படுத்தும் வடிகட்டிகளிலும், சிறுநீரக சுத்திகரிப்புக் கருவிகளிலும் பயன்படுகிறது.

  *



கருத்துகள்

popular content