உரங்கள்

உரங்கள்:

தாவரங்களின் வளர்ச்சிக்கு சுமார் 16 தனிமங்கள் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. அவை

1. பெரும ஊட்டத்தனிமங்கள் :
 ( Macro nutrients )

 இவை தாவரங்களின் வளர்ச்சிக்கு அதிக அளவில் தேவைப்படும் தனிமங்களாகும்.

எ.கா. கார்பன்(C), ஹைட்ரஜன்(H), ஆக்சிஜன்(O), நைட்ரஜன்(N), பாஸ்பரஸ்(P), பொட்டாசியம்(K), சல்பர்(S), கால்சியம்(Ca) மற்றும் மெக்னீசியம்(Mg).

2. நுண் ஊட்டத்தனிமங்கள் :
 (Micro nutrients )

இவை தாவரங்களின் வளர்ச்சிக்கு குறைந்த அளவில் தேவைப்படும் தனிமங்களாகும்.

எ.கா. இரும்பு(Fe), மாங்கனீசு(Mn), மாலிப்டினம்(Mo), துத்தநாகம்(Zn), போரான்(B) மற்றும் குளோரின்(Cl).

தாவரங்களுக்கு போதிய அளவில் மண்ணிலிருந்து கிடைக்கவில்லை எனில் அவற்றின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிதைமாற்ற செயல்கள் பாதிக்கப்படும். இவற்றை நிவர்த்தி செய்யவே உரங்கள் பயன்படுத்தப்படுகிறது.  உரங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை,

1. இயற்கை உரங்கள்
2. செயற்கை உரங்கள்
3. உயிரி - உரங்கள்

1. இயற்கை உரங்கள் :

    தாவர, விலங்குகளின் கழிவுப்பொருட்கள் சிதைக்கப்பட்டு இயற்கை உரங்கள் தயாரிக்கப்படுகிறது.

எ.கா.
அ. மக்கிய உரம் மற்றும் மண்புழு தொழு உரம்:

 இவை மண்புழுக்களைப் பயன்படுத்தி சிதைத்துத் தயாரிக்கப்படுபவை.

ஆ. பசுந்தாள் உரம் :

       இவை சணல் (சணப்பு - குரோட்டலேரியா ஜெனிஸியா), கொழிஞ்சி, தக்கைப்பூண்டு மற்றும் லெகூமினஸ் தாவரங்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது.

2. செயற்கை உரங்கள் :

அ. நைட்ரஜன் உரங்கள் (தழைச் சத்து):

       a. யூரியா
       b. அம்மோனியம் சல்பேட்
       c. அம்மோனியம் நைட்ரேட்

ஆ. பாஸ்பரஸ் உரங்கள் (கனிம சத்து) :

       a. தனி சூப்பர் பாஸ்பேட்
       b. டிரிப்பிள் சூப்பர் பாஸ்பேட்
           (மும்மை சூப்பர் பாஸ்பேட்)
       c. டை அம்மோனியம் பாஸ்பேட் (DAP)

இ. பொட்டாஷ் உரங்கள் :

       a. பொட்டாசியம் நைட்ரேட் (KNO3)
        b. பொட்டாசியம் குளோரைடு ( KCl )

ஈ. கலப்பு உரங்கள் :

     a. நைட்ரோ பாஸ்பேட்
     b. அம்மோனியம் பாஸ்பேட்
     c. டை அம்மோனியம் பாஸ்பேட் ( DAP )

3. உயிரி உரங்கள் :

    உயிருள்ளவற்றிலிருந்து பெறப்படும் உரங்கள் " உயிரி உரங்கள் ". இவை பாக்டீரியா , நீலப்பசும்பாசி ( சயனோ பாக்டீரியா ) மற்றும் பூஞ்சைகள் போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது.

எ.கா. ரைசோபியம் ( இது சயனோ பாக்டீரியங்களான அனபீனா, நாஸ்டாக், அஸோஸ்பைபைரில்லம் , பாஸ்போ பாக்டீரியா போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது).

உரங்களின் பண்புகள் :

💐 நீரில் கரையக்கூடியதாக இருக்க வேண்டும்.

💐 வளரும் தாவரங்கள் நிறைய காலம் பயன்படுத்தும் வகையில் நிலையாயிருக்க வேண்டும்.

💐 தாவரங்களுக்கு எவ்வகையிலும் தீமை விளைவிக்கக் கூடாது.

💐 நிலத்தின் அமிலத்தன்மையை மாற்றக்கூடியதாக இருக்க வேண்டும்.

நைட்ரஜன் உரங்கள் :

அ) நைட்ரேட் உரங்கள் :

       a. சோடியம் நைட்ரேட் ( NaNO3 )
       b. கால்சியம் நைட்ரேட் ( Ca ( NO3 )2 )

ஆ) அம்மோனிய உரங்கள் :

    a. அம்மோனியம் பாஸ்பேட் (NH4)3 PO4
    b. அம்மோனியம் சல்பேட் (NH4)2 SO4
    c. அம்மோனியம் குளோரைடு NH4Cl

இ) நைட்ரேட் - அம்மோனிய உரங்கள் :

     a. அம்மோனியம் நைட்ரேட் NH4NO3

ஈ) அமைடு உரங்கள் :

     a. யூரியா
     b. கால்சியம் சயனமைட்

யூரியா :

தயாரிப்பு :
                         
அம்மோனியாவை நாஃப்தாவிலிருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவுடன் 135 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 10 - 30 atm  அழுத்தத்தில் 90 - 95% கந்தக அமில முன்னிலையில் வினைக்குட்படுத்தி யூரியா தயாரிக்கப்படுகிறது.

                          135゜c
 2NH3  +  CO2       ➡     NH2 - CO2 - NH4
                       10-30 atm                                          
                                                 ⬇
                                   NH2  - CO - NH2 + H2O

🎂 யூரியாவில் அதிகளவு நைட்ரஜன்
 ( 46.66 %) கொண்டுள்ளது.

🎂 இது நலத்தின் PH  ஐ மாற்றுவதில்லை.

🎂 உற்பத்தி செலவு குறைவு. ஏனெனில் இதை தயாரிக்கத் தேவைப்படும் CO2 -  நாஃப்தாவிலிருந்து பெறப்படுகிறது.

🎂 யூரியாவை எவ்வகைப் பயிர்களுக்கும் , எல்லா நிலங்களிலும் பயன்படுத்தலாம்.

ஆ) அம்மோனிய உரங்கள் :

       a. அம்மோனியம் சல்பேட்:

👍 இது அம்மோனியா கலந்த நீர்மத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.

👍 இதிலுள்ள 24 - 25 % அம்மோனியாவை மண்ணிலுள்ள நைட்ரஜனாக்கும் பாக்டீரியா, நைட்ரேட்டாக மாற்றுகிறது.

👍 இது நெல் , உருளைக்கிழங்கு போன்றவற்றிற்கு ஏற்றது.

b. கால்சியம் அம்மோனியம் நைட்ரேட் :

👌CAN - ல் 20 % நைட்ரஜன் உள்ளது.

👌 இது நேரடியாக தாவரங்களால் உறிஞ்சப்படுகிறது.

👌 நிலத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்துவதில்லை.

👌 இது நீரில் மிக அதிகமாக கரைந்து மிக எளிதாக நிலத்தில் கலந்துவிடுகிறது.

தாவரங்களின் வளர்ச்சிக்கு நைட்ரஜனின் பங்கு:

💠 தாவரங்கள் விரைந்து வளர்ச்சியடைய,

💠 அதிக மகசூலை தர,

💠 தாவரப்பொருளில் புரோட்டின் அளவை அதிகரிக்க,

💠 தாவரங்களுக்கு அடர்பச்சை நிறம் தர.

நைட்ரஜனின் செயல்பாடுகள்:

🔷 நைட்ரஜன் உரங்கள் தானியங்களின் புரதத்தினை, அதாவது அமினோ அமில அளவை கூட்டி அல்லது குறைத்து மேம்படுத்துகிறது.

பாஸ்பரஸ் உரங்கள்:

அ) அம்மோனியம் பாஸ்பேட்
ஆ) டை கால்சியம் பாஸ்பேட்
இ) பாறை பாஸ்பேட்
ஈ) எலும்புத்துகள்

கால்சியம் சூப்பர் பாஸ்பேட்:                     ( Ca(H2PO4)2・H2O )

🔻 இது " சுண்ணாம்பின் சூப்பர் பாஸ்பேட் " என்றும் அழைக்கப்படுகிறது.
🔻 இது கால்சியம் - டை - ஹைட்ரஜன் பாஸ்பேட்டும், கால்சியம் சல்பேட்டும் கலந்த கலவையாகும். அதாவது Ca(H2PO4)2   +   2CaSO4 ⚪2H2O

🔻 இதில் 16 - 20 % P2O5  உள்ளது.

🔻 இதில் வினைபுரியக்கூடிய பகுதிப்பொபொருள் கால்சியம் - டை - ஹைட்ரஜன் பாஸ்பேட்டாகும்.

தாவர வளர்ச்சிக்கு பாஸ்பரஸின் பங்கு:

🔴 நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

🔴 தாவரங்கள் விரைந்து முதிர்ச்சியடைய.

🔴 இனவிருத்தி பகுதிகள வளர்ச்சியடைய.

பாஸ்பரஸின் செயல்பாபாடுகள் :

⬛ தாவரங்களின் முக்கிய செயல்களான ஆற்றல் மாற்றம், தாவரத்திற்குள் ஊட்டப்பொருட்களின் இடப்பெயர்ச்சி, ஒரு சந்ததியிலிருந்து அடுத்த சந்ததிக்கு மரபுப் பொருட்கள் கடத்தப்படல் ஆகியவற்றிற்கு பயன்படுகிறது.

பொட்டாஷிய உரங்கள் :

அ) பொட்டாசியம் மூரியேட்.
ஆ) பொட்டாசியம் சல்பேட்.
இ) பொட்டாசியம் நைட்ரேட்.

பொட்டாசியம் நைட்ரேட் ( KNO3 ):

🔵 இது "நைட்டர் உப்பு" எனவும் அழைக்கப்படுகிறது.

தயாரிப்பு :

 பொட்டாசியம் குளோரைடு சோடியம் நைட்ரேட்டுடன் வினைபுரிந்து பொட்டாசியம் நைட்ரேட்டை தருகிறது.

KCl  +   NaNO3   ➡   KNO3   +   NaCl.

⬜ இது புகையிலை, பருத்தி, காபி, உருளைக்கிழங்கு மற்றும் மக்காச்சோளம் போன்றவற்றிற்கு அவசியமாகும்.

தாவரங்களின் வளர்ச்சிக்கு பொட்டாசியத்தின் பங்கு :

🔷 வேதிப்போக்குவரத்து காவலராக,

🔷 வேர்ப்பகுதி ஆரோக்கியமாக இருக்க,

🔷 கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அல்பினாய்டுகளைத் தயாரிக்க.

பொட்டாசியத்தின் செயல்பாடுகள்:

🔺 ஒளிச்சேர்க்கைக்கு உதவும் இலைத்துளைகள் திறத்தல் மற்றும் மூடுதலை கட்டுப்படுத்துகிறது.

🔺 நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இடப்பெயர்ச்சிக்கும் தாவரங்கள் குளிர்ச்சியடையவும் உதவுகிறது.

🔺 சைலக்குழாய்களில் நீர் மற்றும் நைட்ரேட், பாஸ்பேட், கால்சியம், மெக்னீசியம் போன்ற ஊட்டப்பொருட்கள் கடத்துதலுக்கும் முக்கியமாகத் தேவைப்படுகிறது.

🔺 வேர் வளர்ச்சியைத் தூண்டி, வறட்சியைத் தாக்குபிடிக்கும் தன்மையை செடிகளுக்கு அளிக்கிறது.

🔺 நொதிகள் செயல்பாட்டிற்கு உகந்ததான PH  ஐ 7 - 8 வரை நலையாக இருக்க உதவுகிறது.

🔺 காய்கறிகள் மற்றும் கனிகளின் தரத்தினை உயர்த்தி அவை நீண்ட நாள் கெடாமலிருக்க உதவுகிறது.

3. உயிரி - உரங்கள் :

அ) பாக்டீரிய - உயிரி உரங்கள் :

நைட்ரஜனை நிலைநிறுத்தும் பாக்டீரியங்களான  அசிட்டோபாக்டர், ரைசோபியம், அஸோஸ்பைரில்லம் ஆகியவை நைட்ரஜன் சத்தை அதிகரிக்கிறது.

ஆ) உயிரி - உரப்பாசிகள் :
 நாஸ்டாக், சிலிண்ட்ரோஸ்பெர்மம், ப்ளேக்டோ நீமா, டோலிபோத்ரிகஸ் முதலியன.

இ) உயிரி உரமாக வேர்ப்பூஞ்சைகள்.
 ( மைக்கோரைசா )

நிலத்தில் கரையா நிலையிலுள்ள ஊட்டப்பொருளை கரையும் நிலையில் மாற்றுவதற்கு உதவுகிறது.

ஈ) பசுந்தாள்/ பயிர் உயிரி உரம் :

 கிளைரிஸிடியா, இண்டிகோஃபெரா, செஸ்பேனியா போன்ற பயிறு வகை தாவரங்கள் பயன்படுகின்றன.

🔘 தாவரங்களின் வளர்ச்சிக்கு முதல்நிலை ஊட்டப்பொருட்கள் எது?
  N, P, K.

🔘  நைட்ரஜன் குறைப்பாட்டால் தாவரங்களில் ஏற்படும் நோய் எது?
 " குளோரஸிஸ் "

உரங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு :

யூட்ரோபிகேஷன் ( Eutrophication ):
ஆல்கா மலர்ச்சி ( ஆல்கல் புளூம் )

நீரில் கரைந்துள்ள அதிகப்படியான உரச்சத்தின் காரணமாக நீரின் மேற்பரப்பில் அதிகளவு " ஆல்காக்கள் " வளர்கின்றன. இதற்கு " யூட்ரோபிகேஷன் " என்று பெயர்.

கட்டுப்படுத்தும் முறை :

 உயிரியல் தீர்வு முறை :

 இதனை உயிரியல் தீர்வு முறையின்மூலம் அதிகப்படியான நைட்ரஜனை நைட்ரேட்டுகளாக மாற்றி நீக்கலாம்.




கருத்துகள்

கருத்துரையிடுக

popular content